ரஜினியை ஏமாற்றி படத்தை எடுத்த பாரதிராஜா.... அட சூப்பர் ஹிட் படமாச்சே!...

by சிவா |
bharathi
X

ரஜினி கருப்பு வெள்ளையில்தான் முதன் முதலில் நடிக்க துவங்கினார். இப்போது போல் அப்போது எல்லாம் சம்பளம் கொடுக்க மாட்டார்கள். வெறும் ஆயிரத்தில்தான் சம்பளம். ஆனாலும், பெரிய ஹீரோ ஆகும் வரை கொடுப்பதை வாங்கிக் கொண்டு நடித்த நடிகர்கள் ஏராளம். அதில், ரஜினியின் ஒருவர்தான்.

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்து ஹிட் ஆன திரைப்படம் 16 வயதினிலே. மயிலாக ஸ்ரீதேவியும், சப்பாணியாக கமலும், பரட்டை எனும் வேடத்தில் ரஜினியும் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிக்கு வில்லன் வேடம்.

rajini

இப்படம் பற்றி சமீபத்தில் பேசிய பாரதிராஜா ‘அப்போது ரஜினியின் முடி அழகு கவர்ச்சியாக இருக்கும். நான்16 வயதினிலே படத்தை எடுத்த போது அதில் நான் அமைத்திருந்த பரட்டை வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. ஒரு படப்பிடிப்பில் அவரை சந்தித்து ‘நான் ஒரு ஆர்ட் பிலிம் எடுக்கவுள்ளேன்..அதில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என பொய் சொன்னேன்.

bharathi

சம்பளமாக அவர் ஒரு தொகை கேட்டார். அதிகம் என்றேன். குறைத்து ஒரு சம்பளம் சொன்னார்.. அதுவும் அதிகம் என்றேன். நீங்கள் எவ்வளவுதான் கொடுப்பீர்கள் என கேட்டார். ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு குறைவான சம்பளத்தை சொன்னேன். ஆனாலும் அதற்கு சம்மதித்தார். ஆனாலும், அதிலும் 500 சம்பள பாக்கி வைத்தேன். இப்போது கூட என்னை பார்த்தால் ‘பாஸ் அந்த 500 சம்பள பாக்கி இருக்கே’ என கிண்டலடிப்பார் என பாரதிராஜா கூறினார்.

rajini

அப்படத்திற்கு ரஜினிக்கு பேசிய சம்பளம் வெறும் 4 ஆயிரம். அதில் 3500 மட்டுமே ரஜினிக்கு கொடுக்கப்பட்டது. அப்படத்திற்கு கமலுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story