Connect with us

அடுத்தடுத்து விலகும் நடிகர்கள்…. கடுப்பில் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் போட்ட பதிவு….!

bharathi_main

Cinema News

அடுத்தடுத்து விலகும் நடிகர்கள்…. கடுப்பில் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் போட்ட பதிவு….!

சமீபகாலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் நடிக்கும் முக்கிய கேரக்டர்கள் அதில் இருந்து விலகி வருகிறார்கள். அதுவும் விஜய் டிவியில் இருந்து தான் அதிகளவிலான நடிகர்கள் வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இந்த தொடரில் கண்ணம்மாவாக நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் தான் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் ரோஷினி இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இதனை அடுத்து அவர் கதாபாத்திரத்தில் தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.

bharathi1

முன்னதாக பாரதி கேரக்டரின் தம்பியாக அகில் என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகர் அகிலனும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு பதில் புதுமுகம் ஒருவர் அந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.

தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் இருந்து முக்கிய கேரக்டர் ஒருவர் விலகியுள்ளார். அவர் வேறு யாருமல்ல சீரியலில் கண்ணம்மாவின் சகோதரியாக அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து வந்த கண்மணி தான்.

bharathi2

கடந்த சில வாரங்களாகவே சீரியலில் கண்மணியை பார்க்க முடியவில்லை. இவருக்கான காட்சியும் இடம்பெறவில்லை. இதனால் இவர் சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது. அதேபோல் கண்மணியும் சமீபத்தில் விரைவில் வேறொரு ப்ராஜெக்டில் உங்களை என்டர்டைன்மென்ட் செய்கிறேன் என பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சீரியலின் இயக்குனர் அதை உறுதிப்படுத்தி உள்ளார். சீரியலில் இருந்து அடுத்தடுத்த நடிகர்கள் விலகுவதால் கடுப்பான இயக்குனர் பிரவீன் பென்னட், “அய்யய்யோ எத்தனை பேர் மாற்றம், முடியவில்லை” என பதிவு ஒன்றை போட்டுள்ளார். இப்படியே நடிகர்கள் மாறி கொண்டே இருந்தால் சீரியல் நன்றாகவே இருக்காது என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top