மேல் சிகிச்சைக்காக மருத்துவனை மாற்றம்....பாரதிராஜாவுக்கு என்னாச்சு?...
16 வயதினிலே, மண் வாசனை, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா. இவரை திரையுலகினரும், ரசிகர்களும் இயக்குனர் இமயம் என அழைக்கின்றனர்.
கடந்த பல அவருடங்களாக அவர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. ஆனால், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் அவர் நடித்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே, சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை திரையுலகினரும் பலரும் நேரில் சென்று பார்த்தனர்.
இந்நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அவர் குணமடைந்து வர வேண்டும் என திரையுலகினர் பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.