இளையராஜா சினிமாவுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு தனது மூத்த சகோதரர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டங்களில் கச்சேரி நடத்தி வந்தார். இளையராஜாவின் சொந்த ஊர் தேனிக்கு அருகில் இருக்கும் பண்ணைபுரம் என்ற கிராமம்.
அதே போல் இயக்குனர் பாரதிராஜா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மலேரியா இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஊர் ஊராக சென்று அங்கிருக்கும் மக்கள் மலேரியா தடுப்பூசி போட்டிருக்கிறார்களா? இல்லையா? என்பதை பரிசோதிப்பதுதான் அவரது வேலையாக இருந்திருக்கிறது. பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனிக்கு அருகே உள்ள அல்லி நகரம்.
இயற்கை அமைத்த சந்திப்பு
இந்த நிலையில் பாரதிராஜாவும் இளையராஜாவும் முதன்முதலில் சந்தித்துக்கொண்ட தருணத்தை குறித்து பிரபல மூத்த சினிமா பத்திரிக்கையாளரான சுரா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஒரு முறை மலேரியா இன்ஸ்பெக்டராக இருந்த பாரதிராஜா இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இன்ஸ்பெக்சனுக்காக சென்றிருந்தாராம். அப்போது அந்த கிராமத்திற்குள் நுழையும்போது பல இசைக்கருவிகள் வாசிக்கும் சத்தம் அவருக்கு கேட்டதாம். அந்த இசை சத்தத்தை காதில் கேட்டபடியே அந்த சத்தம் வரும் திசையை நோக்கி சென்றாராம் பாரதிராஜா. அது இளையராஜாவின் வீட்டில் இருந்து வந்த இசைதான்.
அப்படித்தான் இளையராஜாவையும் அவரது சகோதரர்களையும் சந்தித்து இருக்கிறார் பாரதிராஜா. அதன் பின் இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களும் பாரதிராஜாவும் மிக சிறந்த நண்பர்களாக ஆனார்களாம். அவ்வாறு பாரதிராஜாவும் இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களும் ஒரே சமயத்தில்தான் சினிமா வாய்ப்பு தேடி வந்திருக்கிறார்கள்.
அதன் பின் இளையராஜாவும் இசையமைப்பாளராக ஆக, பாரதிராஜாவும் இயக்குனர் ஆக, இருவரும் இணைந்து தமிழ் சினிமாவையே புரட்டி போட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவி பேட்டி…
தமிழ் சினிமாவில்…
Kamalhaasan: 4…
SK 25:…
பிலிம் இன்ஸ்டிட்யூட்…