இளையராஜாவும் பாரதிராஜாவும் இணைந்து தொடக்க காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றியிருக்கின்றனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பெரிய விரிசல் விழுந்தது. அந்த விரிசலை தொடர்ந்து பல இயக்குனர்கள் இளையராஜாவுடன் பணியாற்றுவதை நிறுத்திவிட்டனர்.
அந்த வகையில் பாரதிராஜா, தேவேந்திரன், மரகதமணி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார். அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பல திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கினார்.
இவ்வாறு பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றத் தொடங்கிய முதல் திரைப்படம் “கிழக்குச் சீமையிலே”. இத்திரைப்படத்தின் பாடல்களை குறித்து நாம் தனியாக கூறத்தேவை இல்லை. அந்த அளவுக்கு அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
இந்த நிலையில் “கத்தாலங்காட்டு வழி” என்ற பாடல் உருவான விதம் குறித்து பிரபல நடிகரான ஜி.மாரிமுத்து தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
முதலில் இந்த பாடலுக்கு வேறு வரிகள் எழுதப்பட்டிருந்ததாம். “கிழக்குச் சீமையிலே” திரைப்படத்தின் படப்பிடிப்பு வத்தலக்குண்டு பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அந்த பாடல் காட்சியை படமாக்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தார் பாரதிராஜா.
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பாடலை பதிவு செய்யவில்லை. ஆதலால் பாரதிராஜா கடும் கோபத்தில் இருந்தாராம். “இவன் என்ன சீக்கிரம் பாட்டுத் தரமாட்டிக்கான். ரொம்ப லேட் ஆக்குறான். எப்போ கேட்டாலும் நாளைக்கு முடிஞ்சிடும் நாளைக்கு முடிஞ்சிடுங்குறான். இதுக்குத்தான் இவனை வேண்டாம்ன்னு சொன்னேன்” என வைரமுத்துவிடம் புலம்புவாராம்.
ஆனால் வைரமுத்துவோ, பாரதிராஜாவிடம் “இல்லை, பொறுங்கள், இந்த படம் உங்களுக்கு வேறு ஒரு உயரத்தை கொடுக்கும்” என கூறுவாராம். பாடல் பதிவாகாத நிலையில் பாடலுக்குரிய காட்சிகளை படமாக்கிவிட்டாராம் பாரதிராஜா.
படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்த ரஹ்மான், வைரமுத்துவிடம், “நீங்கள் எழுதித்தந்த வரிகள் இந்த காட்சிக்கு பொருந்தாது. ஆதலால் காட்சிக்கு ஏற்றார் போல் வேறு வரிகளை எழுதித் தாருங்கள்” என கூறினாராம். அதன் பிறகுதான் வைரமுத்து “கத்தாலங்காட்டு வழி” என்று தொடங்கும் பாடலை எழுதித்தந்திருக்கிறார். இந்த பாடல் இப்போது வரை மிகப்பிரபலமான பாடலாக திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்னோட எதிரியே இவன்தான்… இளையராஜாவை வம்புக்கு இழுத்த வைரமுத்து… என்ன நடந்தது தெரியுமா?
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…