பாரதிராஜா படத்தை 100 நாட்கள் ஓட வைத்த பாடகி!.. இது புதுசா இருக்கே!….

Ilaiyaraja, Bharathiraja
Bharathi raja: பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் பாரதிராஜா. தமிழ் சினிமா ஸ்டுடியோவுக்குள் மட்டுமே இயங்கி வந்த காலத்தில் கிராமத்து பக்கம் போய் படப்பிடிப்பை நடத்தி தமிழ் சினிமாவின் முகத்தையே மாற்றியவர் பாரதிராஜா. இவரின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜாதான்.
பாரதிராஜா - இளையராஜா கூட்டணியில் அற்புதமான பாடல்கள் உருவானது. பதினாறு வயதினிலே, நிழல்கள், கடலோர கவிதைகள், காதல் ஓவியம், முதல் மரியாதை போன்ற படங்களில் பாடல்கள் மிகவும் பிரபலம். இப்போதும் அந்த படங்களின் பாடல்கள் 80 கிட்ஸ்களுக்கு பிடித்த பாடலாக இருக்கிறது.
பாரதிராஜாவின் படங்களின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது இளையராஜாவின் பாடல்கள்தான். முதல் மரியாதை படத்தின் கதை இளையராஜாவுக்கே பிடிக்கவில்லை. ஆனால், அவர் கொடுத்த இசை வேற லெவலில் இருக்கும். இதை பல மேடைகளிலும் சொல்லி இருந்தார் பாரதிராஜா.

இசைஞானி இளையரஜாவின் இசையில் பல இனிமையான பாடல்களை பாடியவர் பாடகி ஜென்ஸி. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல், முள்ளும் மலரும்” படத்தில் இடம்பெற்ற “அடி பெண்ணே”, பிரியா படத்தில் இடம்பெற்ற “என்னுயிர் நீதானே”, “ஜானி” படத்தில் இடம்பெற்ற “என் வானிலே”, “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் இடம்பெற்ற “காதல் ஓவியம்” போன்ற காலத்துக்கும் ரசிக்கப்படும் பாடல்களை உதாரணமாக கூறலாம்.
இளையராஜா இசையில் பல கிளாசிக் பாடல்களை பாடிய ஜென்சி, திடீரென இனி பாடல்கள் பாடப்போவதில்லை என முடிவெடுத்தார்.கேரளாவில் ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய ஜென்ஸி இப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
நான் பாடிய பாடல்களில் எனக்கு எப்பவுமே மிகவும் பிடித்தது ராஜா சாரும் நானும் சேர்ந்து பாடிய ‘காதல் ஓவியம்’ பாட்டுதான். பாரதிராஜா சார் படத்துலதான் அதிகம் பாடியிருக்கிறேன். ஒருமுறை பாரதிராஜா சார் போன் பண்ணி நீ பாடினதாலதான் என் படம் 100 நாட்கள் ஓடிச்சின்னு சொன்னார்’ என ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார் ஜென்ஸி.