Connect with us
Bharathiraja

Cinema History

பாரதிராஜா உதவி இயக்குனராக பணியாற்றிய படத்திற்கு போஸ்டர் ஒட்டிய திரையரங்கு நிர்வாகம்… இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தமிழின் முன்னோடி இயக்குனராக திகழும் பாரதிராஜா, தொடக்கத்தில் கன்னட இயக்குனரான புட்டன கனகல், தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான ஏ.ஜெகன்னாதன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவந்தார்.

Bharathiraja

Bharathiraja

அதனை தொடர்ந்து தனது முதல் திரைப்படமான “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக ஆனார். அதன் பின் பாரதிராஜா இயக்கிய “கிழக்கே போகும் ரயில்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. இதன் மூலம் பாரதிராஜா தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக வளர்ந்தார்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பாரதிராஜா குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

Athirstam Azhaikiradhu

Athirstam Azhaikiradhu

அதாவது ஏ.ஜெகன்னாதன் இயக்கிய “அதிர்ஷ்டம் அழைக்கிறது” என்ற திரைப்படத்தில் பாரதிராஜா அசோஷியேட் இயக்குனராக பணியாற்றினாராம். அதன் பின் வெகு காலம் கழித்து இயக்குனர் பாரதிராஜா மிகப் பிரபலமான இயக்குனராக வளர்ந்த பிறகு சென்னையில் ஒரு திரையரங்கில் “அதிர்ஷ்டம் அழைக்கிறது” திரைப்படத்தை மீண்டும் திரையிட்டார்களாம்.

Bharathiraja

Bharathiraja

அப்போது அந்த திரையரங்கின் போஸ்டரில் “பாரதிராஜா அஷோசியேட் இயக்குனராக பணிபுரிந்த திரைப்படம்” என்று அச்சடிக்கப்பட்டிருந்ததாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் பாரதிராஜா மிக பிரபலமான இயக்குனராக வலம் வந்தாராம்.

இதையும் படிங்க: மகிழ் திருமேனி அஜித் படத்தை இயக்குவதற்கு காரணமே விஜய்தான்!!… இந்த டிவிஸ்ட்டை நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!!

google news
Continue Reading

More in Cinema History

To Top