தேசிய விருதை தட்டிக்கழித்த பாரதிராஜா!...தலைநகரில் அதிகாரிகளின் முன் முரண்டு பிடித்த சம்பவம்!...
தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனையுடன் படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவரது இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் கருத்தம்மா. கருத்தம்மா திரைப்படம் சமூக பிரச்சினைகளை முன் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்த படத்தில் நடிகை ராஜஸ்ரீ, மகேஸ்வரி, நடிகர் ராஜா, சரண்யா பொன்வன்னன் உட்பட பலரும் நடித்திருந்தனர். படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைக்க வைரமுத்து வரிகளில் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருந்தன.
இந்த கருத்தம்மா திரைப்படம் தேசிய அளவில் சிறந்த படமாக கருதப்பட்டு படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனராக பாரதிராஜா தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டார். தேசிய விருதை பெறுவதற்காக தன் தாயாருடன் தலை நகருக்கு புறப்பட்டார் பாரதிராஜா. கருத்தம்மா என்ற பெயர் தன் தாயாரின் பெயரான கருத்தம்மாவை தான் படத்திற்கும் வைத்திருந்தார்.
விருது பெறும் போது தன் தாயாருடன் சேர்ந்து பெற வேண்டும் என மேடையில் ஒரு கோரிக்கை வைத்தார் பாரதிராஜா. ஆனால் அங்கு உள்ள அதிகாரிகள் குடியரசு தலைவர் கையால் மட்டுமே விருதை பெற்றுக் கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக கூற அதற்கு பாரதிராஜா அப்படி என்றால் இந்த விருதே எனக்கு வேண்டாம் என ஓரக்க கூறினாராம். அதன் பின் அதிகாரிகள் கலந்தாலோசித்து தன் தாயாருடன் சேர்ந்து குடியரசுத்தலைவரிடமிருந்து விருதை பெற்றாராம் பாரதிராஜா.