ஹீரோ யார்ன்னு சொல்லாமலே கதாநாயகியை அழைத்து வந்த பாரதிராஜா.. எல்லாம் பாக்கியராஜ் செஞ்ச வேலை!.. 

Published on: February 2, 2023
Bhagyaraj and Bharathiraja
---Advertisement---

பாக்யராஜ் தொடக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்ற செய்தி பலரும் அறிந்ததே. பாரதிராஜா இயக்கிய “சிகப்பு ரோஜாக்கள்” என்ற திரைப்படத்திற்கு கதை எழுதியவர் பாக்யராஜ்தான். மேலும் அத்திரைப்படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்திலும் பாக்யராஜ் நடித்திருப்பார். அதே போல் பாரதிராஜா இயக்கிய “16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்”, ஆகிய திரைப்படங்களிலும் கூட பாக்யராஜ் நடித்திருந்தார்.

Bhagyaraj
Bhagyaraj

இந்த நிலையில் பாரதிராஜா “புதிய வார்ப்புகள்” என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக முடிவெடுத்திருந்தார். மேலும் அத்திரைப்படத்தை தனது சொந்த பேன்னரிலேயே தயாரிப்பதாகவும் முடிவு செய்திருந்தார்.

Bharathiraja
Bharathiraja

“புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் ஒரு புது முக கதாநாயகனை அறிமுகம் செய்யலாம் என்று முடிவு செய்த பாரதிராஜா, கதாநாயகனுக்கான தேடலில் இறங்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் யாரும் தென்படவில்லை. அப்போதுதான் அவருக்கு பாக்யராஜ்ஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினால் என்ன என்று யோசனை வந்திருக்கிறது.

Puthiya Vaarpugal
Puthiya Vaarpugal

இந்த விஷயத்தை பாரதிராஜா பாக்யராஜ்ஜிடம் கூறியபோது “ஏங்க, முதல் படம் உங்க சொந்த பேன்னர்ல தயாரிக்கிறீங்க. எதாவது ஏடாகூடமா ஆகிடுச்சுன்னா என் மேலத்தானே பழி விழுகும்” என கூறினாராம். அதற்கு பாரதிராஜா “யப்பா நீ தைரியமா இருப்பா, நீதான் ஹீரோ” என பாக்யராஜ்ஜை தேற்றினாராம் பாரதிராஜா.

Rati Agnihotri
Rati Agnihotri

அதன் பின் இத்திரைப்படத்திற்கு ரதி அக்னிஹோத்ரியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என அவரை ஒப்பந்தம் செய்தாராம் பாரதிராஜா. மேலும் ரதியிடம் பாக்யராஜ்தான் ஹீரோ என்று கூறினால் ஒருவேளை அவர் நடிக்க மறுத்துவிடுவாரோ என்று எண்ணி, அவரிடம் யார் கதாநாயகன் என்றே கூறவில்லையாம். அவ்வாறுதான் அவரை நடிக்க அழைத்து வந்து அத்திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: எஸ்கேப் ஆக நினைத்த விஜய்.. தயாரிப்பாளரிடம் கோர்த்துவிட்ட சரத்குமார்..

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.