Bharathiraja: மனைவி இருந்தும் அருகில் இல்லாத வருத்தம்! பாரதிராஜாவின் மோசமான நிலைமை

Published on: January 6, 2026
bharathi (1)
---Advertisement---

இயக்குனர் சிகரம் பாரதிராஜா இன்று மூச்சு பிரச்சனை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் இறந்து விட்டதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் அது முற்றிலும் வதந்தி என பின்னர் தெரியவந்தது. தொடர்ந்து இப்படி பரவப்படும் வதந்திகளால் மருத்துவமனையில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. பாரதிராஜா தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். கூடிய சீக்கிரம் அவர் பொது வார்டுக்கு மாற்றப்படுவார் என்று மருத்துவமனையில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது.

அது மட்டுமல்ல தயாரிப்பாளரும் இயக்குனருமான செல்வமணியும் பாரதிராஜாவின் உடல் நலம் குறித்து நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பாரதிராஜாவின் நிலைமை குறித்து ஒரு பேட்டியில் விளக்கமாக பேசியுள்ளார். பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் பாரதிராஜாவின் இறப்பு அவரை பெரிய அளவில் பாதித்தது. அந்த சோகத்தில் இருந்து அவர் இன்றுவரை மீளவில்லை. அதன் காரணமாகவே பாரதிராஜாவின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால் அவருடைய மகள் தன்னுடைய அப்பாவான பாரதிராஜாவை மலேசியாவுக்கு அழைத்துக் கொண்டு ஒரு ஆறு மாதம் தன்னுடன் வைத்திருந்தார்.

ஆனால் பாரதிராஜாவுக்கு அங்கு இருக்க முடியவில்லை. மீண்டும் சென்னைக்கு வந்து விட்டார். கடைசி காலம் வரை கணவனோ மனைவியோ யாராக இருந்தாலும் தன்னுடைய துணையுடன் இருந்தால் மட்டுமே ஓரளவு தன் வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு போக முடியும். அது பாரதிராஜாவுக்கு அமையவில்லை. ஏனெனில் அவருடைய மனைவியும் பாரதிராஜாவுடன் இல்லை. அதற்கு காரணம் என்ன என்பதை என்னால் சொல்ல முடியாது என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் பயில்வான் ரெங்கநாதன். பாரதிராஜாவுக்கு மட்டுமல்ல திரைத்துறையில் இருக்கும் பல பேருக்கு இப்படித்தான் நிலைமை இருக்கிறது.

சொந்த வாழ்க்கை சோகமாக தான் இருக்கும். ஆனால் நம்மை சிரிக்க வைப்பார்கள். பெரிய இயக்குனர் பெரிய காரில் போகிறார் என்று வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று தான் தெரியும். ஆனால் அவரை புரிந்து கொண்ட அவருடன் இருக்கின்ற அவர் தம்பி போன்றவர்களுக்கு தான் தெரியும் அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறார் என்று. இதில் அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதும் அவருடைய உடல்நிலை மோசமானதுக்கு ஒரு காரணம் என்று எடுத்துக் கொள்ளலாம். உள்ளமும் கெட்டுப் போய்விட்டது உடலும் கெட்டுப் போய்விட்டது.

இதுதான் பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை. சில ஆண்டுகளாகவே அவர் யாரையும் பார்க்கவில்லை. உதாரணமாக விஜயகாந்த் எப்படி ஒரு சூழ்நிலையில் இருந்தாரோ அதே போல் நிலையில்தான் இருக்கிறார். தன்னை யாராவது சந்திக்க வருகிறார் என்றால் பாரதிராஜா அழுவார். மறுபடியும் சோகத்திற்கு போவார்.

அவர் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அவர் மீண்டும் நலமுடன் வருவார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்னொரு விஷயம் பாரதிராஜாவின் கருப்பு பக்கம் எனக்கு தெரியும். ஆனால் அந்த கருப்பு பக்கத்தை நான் சொல்ல விரும்பவில்லை.

உதாரணத்திற்கு சொல்லனும்னா அவருடைய பெரும்பாலான படங்கலில் தயாரிப்பு பாரதிராஜா என்று வரும். ஆனால் பிறகு சந்திர லீலா பாரதிராஜா என்று வெளியானது. அது அவருடைய மனைவி பெயர். ஏன் அப்படி வந்தது என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை நான் சொல்ல மாட்டேன் என பயில்வான் ரெங்க நாதன் தெரிவித்திருக்கிறார்.