இது மட்டும் கொடுமையா தெரியலயா? - கொந்தளித்த பாரதிராஜா

bharathi
தமிழ் திரையுலகில் அன்று முதல் இன்று வரை தன்னுடைய கணீர் குரல் மூலம் என் இனிய தமிழ் மக்களே என பாசத்தோடு அழைக்கும் இயக்குனர் பாரதிராஜா. 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஒரு ட்ரெண்ட் செட்டரை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

bharathi1
மண் மணம் வீசும் கதைக்களத்தோடு தன் திரைப்படங்களின் மூலம் கிராமத்து வாசனையை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர். கிராமத்து வாழ்க்கையை அணு அணுவாக ரசித்துப் பார்த்து வந்த பாரதிராஜாவுக்கு அந்த வாழ்க்கையோடு பின்னி பிசையும் அளவிற்கு இயல்பான மனிதர்கள் தேவைப்பட்டார்கள் .அதனாலேயே அதுவரை அழகான மனிதர்களைத்தான் சினிமா கொண்டிருந்தது .அதை முற்றிலும் மாற்றியவர் பாரதிராஜா.
இந்த நிலையில் பாரதிராஜாவிடம் இன்றைய இயக்குனர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என கேட்கப்பட்டது. அதற்கு பாரதிராஜா அந்த காலத்தில் இயக்குனர்களிடமே படம் இருந்தன. ஆனால் இப்பொழுது இயக்குனர்களிடமிருந்து நடிகர்களிடம் மாறி திரும்பவும் இயக்குனர்களின் கையிலே ஒப்படைக்கப்பட்டிருப்பதை பார்த்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறினார் .
மேலும் இன்றைய இயக்குனர்களில் வெற்றிமாறன், சுசீந்திரன், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் போன்ற இயக்குனர்களை மிகவும் பிடித்திருக்கிறது என்றும் அவர்கள் படங்களை இயக்கும் விதம் என்னை மிகவும் பிரமிக்க வைக்கிறது என்றும் கூறினார். ஆனால் அவர்களிடம் எனக்கு பிடிக்காத விஷயம் என்னவென்றால் படத்தில் ஏகப்பட்ட வயலன்ஸ் காட்சிகள் வைத்திருப்பது மட்டும்தான் என்று கூறினார்.

bharathi2
இதைப் பற்றி சென்சாரிடமும் கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது என்று கூறிய பாரதிராஜா படத்தில் ஒரு நாய், யானை என விலங்குகளை கொடுமைப்படுத்துவதை எதிர்க்கும் சென்சார் போர்டு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மிக மோசமாக அடிப்பதை மட்டும் ஏன் ஒத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அதுவும் ஒருவித துன்புறுத்தல் தானே? இதைப் பற்றி சென்சாரிடம் கேட்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது என பாரதிராஜா கூறினார் .மேலும் நான் சொன்ன இயக்குனர்களிடம் எல்லாம் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான். வயலன்சை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார் பாரதிராஜா.