முன்ன செய்த வினை இப்ப வரைக்கும் துரத்தும் அவலம்.. பாரதிராஜாவின் கடுங்கோபத்திற்கு ஆளான இயக்குனர்..

bharathiraja
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக வளர்ந்து நிற்பவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவை 16 வயதினிலே முன்பு 16 வயதினிலே பின்பு என இருவகையாக பிரிக்கலாம் என கவிஞர் வாலி ஒரு மேடையிலேயே கூறினார். அந்த அளவுக்கு அந்த படத்தின் தாக்கம் இருந்தது.

bharathiraja
பாலசந்தர் , பாரதிராஜா என தங்கள் படைப்புகளால் இளம் தலைமுறையினருக்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர். அந்த வகையில் பாரதிராஜா ஒரு இளம் தலைமுறை இயக்குனரை பார்த்து வியந்து மனதார பாராட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க : கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!.. திடீரென கதவு பூட்ட சொன்னாங்க.. மூத்த நடிகையை ஆச்சரியப்படுத்திய ஜெயலலிதா..
ஆனால் அந்த இயக்குனரோ பேராசையில் இப்பொழுது இருக்கிற வேலையையும் விட்டுவிட்டு வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. ரட்சகன், ஜோடி, ஸ்டார் போன்ற படங்களை கொடுத்த பிரவீன் காந்தி தான்.
ரட்சகன் படத்தை பார்த்து ரஜினியே பிரவீன் காந்தியிடம் இது நம்ம பண்ணியிருக்க வேண்டிய படம் என்று கூறினாராம். மேலும் பாரதிராஜாவும் பிரவீன் காந்தியிடம் பாலசந்தர், பாரதிராஜா, சங்கர் போன்றவர்கள் ஒரு பாதையை அமைத்துக் கொடுத்து விட்டார்கள். அதில் நீ இப்ப ஒரு காரை ஓட்டிக் கொண்டு போய்கிட்டு இருக்க,

praveen gandhi
இப்படியே வளர்ந்து ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும். சங்கருக்கு அடுத்தப்படியாக உயர வேண்டும் என கூறினாராம். ஆனால் இப்பொழுது பாரதிராஜா பிரவீன் காந்தியை எங்கு பார்த்தாலும் சட்டென திரும்பி விடுவாராம். காரணம் கடுங்கோபத்தில் இருக்கிறாராம் பாரதிராஜா. ஏனெனில் பிரவீன் காந்திக்கு தொடர்ந்து பல படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தாலும் நானும் நடிப்பேன் என்று முரண்டு பிடித்திருக்கிறார்.
அதனாலேயே ஒரு சில ஹீரோக்கள் இவரின் வாய்ப்புகளை மறுத்துவிட கொஞ்ச நாள்களாகவே படம் இயக்காமல் சும்மா தான் இருக்கிறார் பிரவீன் காந்தி. சமீபத்தில் தான் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறாராம். அது முடிந்ததும் முதலில் பாரதிராஜாவிடம் தான் காட்டுவேன். என்று கூறியிருக்கிறார்.