கதை சொல்லப் போன பாரதிராஜா!.. ஜெயலலிதாவுடன் வீட்டில் இருந்த அந்த நடிகர்!..

jayalalitha bharathiraja
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் கொண்டாடும் இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. தமிழில் மண்வாசனை , உணர்வுகள் நிறைந்த படங்களை கொடுப்பதில் தலைசிறந்த இயக்குனராக வலம் வந்தார். இயக்குனர் இமயம் என்று பெருமையாக கருதப்படுபவர் பாரதிராஜா. கிட்டத்தட்ட 80களில் முன்னனி நடிகைகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் பாரதிராஜாவால் தான் அறிமுகம் செய்யப்பட்டவர்கள்.

jayalalitha
இவர் இயக்குனராக அறிமுகம் ஆன முதல் படம் 16 வயதினிலே திரைப்படம். இந்த படத்தில் ஸ்ரீதேவி, கமல், ரஜினி நடித்து படம் பெருமளவு வெற்றி பெற்றது. ராதிகா, ராதா, ரேகா, ஸ்ரீதேவி, ஆகிய பல நடிகைகளை அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குச் சொந்தக்காரராக பாரதிராஜா திகழ்ந்தார்.
ஆனால் 16 வயதினிலே படத்திற்க்கு முன்னாடி பாரதிராஜா ஒரு படம் பண்ணுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அன்னக்கிளிக்கு கதாசிரியராக இருந்த அன்னக்கிளி கே. செல்வராஜுடன் இணைந்து ஒரு கதையை தயார் செய்து ஜெயலலிதாவை பார்க்க சென்று விட்டனர்.

jayalalitha shoban babu
சொந்தவீடு என்ற தலைப்பில் அந்த கதையை உருவாக்கி போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவை பார்க்க பாரதிராஜாவும் கே.செல்வராஜும் சென்றனர். அப்போது மாடியில் இருந்து ஒரு தேவதை மாதிரி ஜெயலலிதா இறங்கி வந்தாராம். கீழே பாரதிராஜாவும் கே.செல்வராஜுவும் உட்கார்ந்திருந்தனராம்.
அப்போது பாரதிராஜா கதை சொல்ல பொறுமையுடன் கேட்டுக் கொண்டே இருக்க ஜெயலலிதாவும் ஆர்வம் அதிகமாகி மிகவும் ஆவலாக கேட்டுக் கொண்டிருந்தாராம். பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருந்ததனால் கதையோடு ஒன்றிப் போய்விட்டாராம். அப்போது மாடியில் இருந்து நடிகர் சோபன்பாபு கீழே இறங்கி வந்தாராம்.

k. selvaraj
அவரை பார்த்த ஜெயலலிதா கையசைத்து மேலே போங்க என்று கைஜாடையை காட்டி அனுப்பி விட்டாராம். அதன் பின் கதை பிடித்துப் போக 28 நாள்கள் கால்ஷீட் கொடுத்தாராம் ஜெயலலிதா. படத்திற்கு ஹீரோவாக முத்துராமனை கமிட் செய்திருக்கிறார் பாரதிராஜா. ஆனால் பாரதிராஜாவுக்கு பிடிக்காதவர்கள் சிலர் பாரதிராஜாவை பற்றி இவன் நகல் எடுக்க வந்தவன், என்னத்த படம் எடுக்க போறான் என்று விமர்சனம் செய்திருக்கின்றனர். இந்த விமர்சனம் ஜெயலலிதாவின் காதில் விழ அந்தக் கதை அப்படியே நின்று விட்டது.
இதையும் படிங்க : நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியரா?!. இந்த பாட்டெல்லாம் எழுதியது அவரா?… ஆச்சர்ய தகவல்…
இது பின்னாளில் ரேவதியை வைத்து புதுமைப் பெண் என்ற பெயரில் படமாக ஒரு காவியமாக வெற்றி நடை போட்டது. இந்த சுவாரஸ்ய தகவலை கதாசிரியர் கே.செல்வராஜ் ஒரு பேட்டியில் கூறினார்.