திருமண வரவேற்பில் மணிவண்ணன் அணிந்திருந்த கோர்ட் சூட்!.. யாருடையது தெரியுமா?..

Published on: May 4, 2023
mani
---Advertisement---

தமிழ் சினிமாவில் நக்கல் மன்னனாக நையாண்டி மன்னனாக திகழ்ந்தவர் நடிகர் மணிவண்ணன். ஒரு இயக்குனராக உதவி இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர் அதன் பிறகு பல படங்களில் ஒரு நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்.

கொங்கு பாஷையில் நக்கலும் நையாண்டியுமாக அரசியலை கிண்டலும் கேலியும் ஆக சொல்லும் ஒரு அற்புதமான நடிகர் மணிவண்ணன். இவருடைய பல படங்களில் அரசியல் வாசனை அதிகமாகவே இருக்கும். அதுவும் போக அரசியலை மிகவும் கேலியாகவும் அறிவுபூர்வமாகவும் அழகாக விளக்கியிருப்பார்.

Also Read

மணிவண்ணனை பொறுத்த வரைக்கும் அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல் என்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல் என்றும் கருதி அவை தன் படங்களின் மூலம் உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தினார்.

ஆரம்ப காலங்களில் சினிமா என்பது ஒரே மாதிரியாகவே இருக்கின்றன என்று கருதி மிகவும் சளிப்படைந்து இருக்கிறார் .அதன் பிறகு வந்த 16 வயதினிலே, முள்ளும் மலரும் ,உதிரி பூக்கள் போன்ற படங்களை பார்த்து நாமும் சினிமாவிற்கு வர வேண்டும் என்ற ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது மணிவண்ணனுக்கு.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த மணிவண்ணன் நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய படங்களில் கதை வசனம் எழுதி தன்னுடைய திறமையை காட்டி இருக்கிறார் மணிவண்ணன். அதுமட்டுமல்லாமல் ஆகாய கங்கை என்ற படத்தில் வசனத்தை எழுதியதன் மூலம் இவருக்கும் இயக்குனரும் நடிகரும் ஆன மனோபாலாவிற்கும் இடையே ஒரு நட்பு பிறந்திருக்கிறது.

இப்படி திரையுலகில் பல பிரபலங்களுடன் இணக்கமான நட்பை கொண்டிருந்த மணிவண்ணன் ஈழத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார். அனைவரிடமும் நல்ல நட்பு கொண்டிருந்த மணிவண்ணன் தன்னுடைய திருமண வரவேற்பின் போது ஒரு வித்தியாசமான கோட் சூட் அணிந்து இருப்பார்.

அந்த புகைப்படம் கூட இன்றளவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது மணிவண்ணனுக்கு அந்த கோட் சூட்டை கொடுத்தது பாரதிராஜா தானாம். அதாவது பாரதிராஜா ஏற்கனவே அணிந்து இருந்த அந்த கோர்ட் சூட்டை மணிவண்ணனுக்காக கொடுத்தாராம். இந்த சுவாரஸ்ய தகவலை மனோபாலா ஒரு பேட்டியின் போது பகிர்ந்த அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க : ராஜீவ் காந்திக்கு சரோஜா தேவி செய்து கொடுத்த சத்தியம்!.. கடைசி வரையும் மீறல… அப்படி என்னவா இருக்கும்…