ஜனகராஜ் வாழ்க்கையில் ஒளியேற்றிய இயக்குனர் யார் தெரியுமா..! – பார்க்கலாமா?..

0
807
Janagaraj
Janagaraj

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகர் ஜனகராஜ் அற்புதமான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். இவர் என்பது, 90களில் காமெடியில் கலக்கியவர். இவர் காமெடியால் சிரிக்காதவர்களை இல்லை என்று கூறலாம்.

உதாரணமாக இவர் பேசிய என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா… என்ற வசனம் இன்று வரை அனைவராலும் விரும்பி கேட்கப்படக்கூடிய வசனங்களில் ஒன்றாக உள்ளது. சந்திரபாபு, கமலஹாசன், லூஸ் மோகனுக்கு அடுத்தபடியாக சென்னை தமிழில் பக்காவாக பேசும் ஆற்றல் கொண்டவர்.

Janagaraj
Janagaraj

ஆரம்ப நாட்களில் வாய்ப்பை இவர் தேடி வந்த போது பாரதிராஜா, பாக்யராஜிடம் இவருக்கு ஒரு வயதான கேரக்டரை நடிக்க பெற்றுத் தந்திருக்கிறார். இதுதான் இவர் படத்தில் கொடுத்த முதல் என்ட்ரி.

தனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியிலிருந்து ஜனகராஜுக்கு விதி வேலை செய்தது. திடீரென்று ஏற்பட்ட விபத்தின் காரணமாக இவருக்கு முகவாதம் ஏற்பட்டு கடுமையான காயங்களும் முகத்தில் ஏற்பட்டது.

எனவே குறித்த நேரத்திற்கு சூட்டிங் செல்ல முடியாமல் சில நாட்கள் கழித்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றவுடன் பாரதிராஜா டென்ஷன் ஆகி விடுகிறார். மேலும் முகத்தைப் பார்த்து சில கேள்விகள் கேட்க திடீரென்று தனக்கு ஏற்பட்ட விபத்தை கூறி விடுகிறார். இதனை அடுத்து அவர் கூறிய காட்சிகள் எடுக்கப்பட்டது.

Bharathiraja
Bharathiraja

இதனை அடுத்து அடுத்தடுத்த நாட்கள் ஷூட்டிக்கு சென்ற ஜனகராஜ் அந்த செட்டிலயே உறங்குவது, தள்ளாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்ட போது ஒரு மதிய வேளையில் அவரை அழைத்து செம காண்டாகி டோஸ் விடுகிறார் இயக்குனர் பாரதி ராஜா.

ஆனால் ஜனகராஜ் தன்னிடம் இருக்கக்கூடிய அத்தனை மாத்திரைகளையும் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக்காட்டி தனக்கு ஏற்பட்ட நிலையை தெளிவாக விவரிக்கிறார். இதனை அடுத்து பாரதிராஜா அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு மனோபாலாவையும் அழைத்து இவரை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பிறகு பல படங்களில் நடித்திருக்கும் ஜனகராஜ் மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் முதல் மரியாதை படத்தில் நடித்து மிக சிறந்த பெயரை அடைகிறார்.

ஜனகராஜின் தோற்றம் கோணலான வாய் இவற்றைப் பார்த்து சில பேர் அவரை மென்டலாக கூட கருதியினார்கள்.ஆனால் அதற்கு காரணமே அந்த விபத்து தான் என தெரிந்தால் யாரும் அவரை நினைத்திருக்க மாட்டார்கள்.

மேலும் இயக்குனர் பாரதிராஜா இவ்வளவு நல்ல மனிதநேயம் மிக்கவர் என்பது ஆபத்தான காலகட்டத்தில் தான் சினிமா துறையில் முன்னேற பக்கபலமாக இருந்தவர் என்றும் கூறலாம்.

google news