Categories: Cinema History Cinema News latest news

ரஜினியை நிறைய காயப்படுத்திருக்கேன்! – மனம் வருந்திய பாரதிராஜா..!

ரஜினி சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாக துவங்கிய அதே காலக்கட்டத்தில் பிரபலமானவர்தான் இயக்குனர் பாரதி ராஜா. அவரது முதல் படமான 16 வயதினிலே திரைப்படமே தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாகும்.

அப்போது முதல் இப்போது வரை வெகு காலமாக இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். 16 வயதினிலே திரைப்படத்தை பாரதி ராஜா இயக்கும் காலக்கட்டத்தில் ஏற்கனவே ரஜினி ஓரளவிற்கு பிரபலமாக இருந்தார்.

bharathi raja 2

ஏனெனில் நடிகர் கமல்ஹாசனோடு அவர் சில படங்களில் நடித்திருந்தார். அப்போது பரட்டை என்கிற கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து அதை பற்றி ரஜினியிடம் பேசியுள்ளார் பாரதிராஜா. கதையை கேட்டதும் ரஜினிக்கு படம் பிடித்துவிட்டது.

படத்திற்கு சம்பளமாக 5000 ரூபாய் பேசியுள்ளார் ரஜினி. ஆனால் படத்தின் பட்ஜெட்டே 5 லட்சம்தான் அதனால் உங்களுக்கு 5000 தர முடியாது என கூறி 3000 ரூபாய்க்கு பேசி முடித்துள்ளார் பாரதிராஜா.

இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு:

ஆனால் அதன் பிறகு அதிக தடவை பாரதிராஜாவிற்கும் ரஜினிக்கும் இடையே பிரச்சனைகள் நடந்துள்ளன. ஒரு பேட்டியில் பாரதிராஜா கூறும்போது ரஜினி என்னுடைய மிக நெருங்கிய நண்பன். வெகு வருடங்களாக நாங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம்.

Rajinikanth

ரஜினியை நான் பலமுறை காயப்படுத்தியிருக்கிறேன். ஆனாலும் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் என்னிடம் சாதரணமாக பழகக்கூடியவர் ரஜினிகாந்த். அதுதான் ரஜினியின் பெரிய மனசுத்தனம் என கூறியுள்ளார் பாரதிராஜா.

Published by
Rajkumar