வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘விடுதலை’. இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே சமயம் ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு விடுதலை படக்குழுவினர் அனைவரையும் சந்தித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
படத்தில் சூரி, விஜய்சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், இயக்குனர் தமிழ் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றனர். ஒரு குறிப்பிட்ட கிராமம் படும் வேதனையை விளக்கும் படமாக இந்தப் படம் அமைந்திருக்கும். மேலும் போலீஸால் அந்த கிராமல் படும் அவஸ்தையையும் வெற்றிமாறன் காட்டியிருப்பார்.
மொத்தத்தில் படம் அனைவரையும் திருப்திபடுத்தியதாகவே அமைந்திருந்தது. இந்த நிலையில் முதலில் விடுதலை படம் ஒரே பாகமாகத்தான் எடுக்க நினைத்தார்கள். விஜய் சேதுபதி விடுதலை படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பாரதிராஜாதான். அவர் மட்டும்
நடித்திருந்தால் படம் ஒரே பாகமாகத்தான் வெளிவந்திருக்குமாம். அதன் பிறகு விஜய் சேதுபதியை உள்ளே இழுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே சூரி கதாநாயகனாக இருக்கும் பட்சத்தில் விஜய்சேதுபதியையும் கொண்டு வருவது கொஞ்சம் சிக்கலாகத்தான் இருந்திருக்கிறது.
அதனாலேயே விஜய் சேதுபதிக்கு என்று சண்டைக் காட்சிகள், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதையில் சில மாற்றங்கள் செய்ததனால் படத்தின் நீளமும் நீண்டிருக்கிறது. அதனாலேயே இரண்டு பாகங்களாக விடுதலை படம் மாறியிருக்கிறது. மேலும் இரண்டாம் முழுவதும் விஜய் சேதுபதி உண்டான படமாகத்தான் இருக்க போகிறதாம். இந்த தகவலை படத்தின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் கூறினார்.
இதையும் படிங்க :திடீரென வந்த தொலைப்பேசி அழைப்பு.. கண்ணீர் விட்டபடி ஓடிய எம்.எஸ்.வி!.. காத்திருந்த அதிர்ச்சி!..
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…