சினிமாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்ப விதவிதமான டெக்னாலஜிகள் பயன்படுத்தப்படுகின்றன. முன்பெல்லாம் ஹிந்தி சினிமா என்றழைக்கப்படும் பாலிவுட் தான் இந்திய சினிமாவிலேயே பெரிதாக பேசப்பட்ட சினிமா உலகமாக கருதப்பட்டது.
ஆனால் இன்றைய சூழலில் அதே பாலிவுட் என்ன நிலைமையில் கிடக்கிறது என்று கண்கூடாக பார்க்கமுடிகிறது. ஹிந்தி சினிமா ரசிகர்களே திரைக்கு வந்து சினிமாவை பார்க்க விரும்புவதில்லை.மேலும் 80கள் காலகட்டத்தில் தெலுங்கு மற்றும் மலையாளம் சினிமா தமிழ் சினிமாவின் வசதிகளை தான் பயன்படுத்தி வந்திருக்கின்றன.
இதையும் படிங்க : இந்த கதாபாத்திரத்தில் என்னை கிண்டல் செய்வாங்களா… அஜித்தே பயந்த சம்பவம்… என்ன படம் தெரியுமா?
இந்தியாவில் முதல் ஊமைத்திரைப்படம், முதல் பேசும் திரைப்படம் என தமிழ் சினிமாவில் இருந்து தான் பரிமாணம் பெற்றிருக்கின்றன. உலக அளவில் தமிழ் சினிமாவும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது என்றே கூறலாம். எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்கு முன்பாகவே ‘எஸ்.எஸ்.வாசன் இயக்கிய சந்திரலேகா ’ திரைப்படம் தான் முதன் முதலி அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஆகும்.
இப்படி மற்ற மொழி படங்களுக்கு தமிழ் சினிமா ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் யுனிவெர்ஸ் என்ற வார்த்தை மிகவும் டிரெண்டாகி வருகின்றது. அதாவது முன்பு எடுத்த படங்களின் கதாபாத்திரங்களை அடுத்து எடுக்கப் போகும் படங்களில் காட்டி அதன் தொடர்ச்சியாக வருவது தான் யுனிவெர்ஸ் என்ற வார்த்தைக்கு பொருளாக கொள்ளப்படுகிறது.
கைதி படத்தின் கதாபாத்திரங்களை விக்ரம் படத்தில் தத்ரூபமாக காட்டியிருப்பார். அதிலிருந்தே லோகேஷ் யுனிவெர்ஸ் பிரபலமானது. மேலும் லோகேஷிற்கு முன் நான் தான் யுனிவெர்ஸை கிரியேட் பண்ணியிருக்கிறேன் என்று பல பிரபலங்கள் கூறும் செய்தியும் வைரலானது.
இதையும் படிங்க : “மேக்கப்லாம் கிடையாது… நிஜ கலர்”… அந்த படத்தில் இப்படித்தான் சூர்யா கருப்பாக மாறினார்??… அடேங்கப்பா!!
மேலும் ரஜினியின் பாபா படத்திலும் மந்திரத்தை யோசித்து பார்ப்பதற்காக நீலாம்பரியை இப்பொழுது பார்க்க வேண்டும் என நினைத்து ரஜினி அந்த மந்திரத்தை சொல்லுவார். உடனே நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணனும் பாபா படத்தில் தோன்றியிருப்பார். இது ரஜினி உருவாக்கிய யுனிவெர்ஸ் என்று இந்த பதிவை கூறிய வலைபேச்சு அந்தனன் தெரிவித்தார்.
இவர்களுக்கெல்லாம் முன்னாடியே இந்த யுனிவெர்ஸை தமிழ் சினிமாவில் முதன் முதலில் உருவாக்கியவர் இயக்குனர் பாரதிராஜா தான் என்றும் வலைப்பேச்சு அந்தனன் கூறினார். அதாவது அவர் இயக்கிய 16 வயதினிலே படத்தில் வரும் சப்பானி, மயிலு கதாபாத்திரத்தை கிழக்கே போகும் ரயில் படத்தில் காட்டியிருப்பார். அந்த படத்தில் ஒரு திருமணத்திற்கு மொய் எழுத பேரைக் கேட்டால் ‘பொட்டிக்கட மயிலு புருஷன் சப்பானி’ என்ற பெயரில் ஒரு சத்தம் வரும். இதுதான் முதன் முதலில் உருவான யுனிவெர்ஸ் என்று அந்தனன் கூறினார்.
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…