ஹோட்டல் அறையில் நின்னு அழுது புலம்பிய நடிகை..! பாரதிராஜா இப்படியும் பண்ணுவாரா...?

by Rohini |
bharathi_main_cien
X

70,80 களில் தமிழ் சினிமாவையே தன் கட்டுக்குள் வைத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் மூலம் அறிமுகமான பல நடிகைகள் முன்னனி நடிகைகளாகவே வலம் வந்தனர். எதார்த்த நடிப்பை எதிர்பார்க்கும் இவர் நடித்தே காட்டி தனக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கி விடுவார். இவரின் படைப்பில் இன்றளவும் நம் நியாபகத்திற்குள் வந்து போகும் படம் கிழக்குசீமையிலே திரைப்படம் தான். அண்ணன் தங்கை பாசப்பிணைப்பை பாசமலருக்கு அடுத்தபடியாக இந்த படத்தின் மூலம் தான் நாம் பார்க்க முடிந்தது.

bharathi1_cine

இதில் நடிகர் விஜயக்குமாருக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நடிகை வடிவுக்கரசியை தேர்வு செய்து அவரை மதுரை ஒட்டன்சத்திரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வரச்சொல்லியிருக்கிறார். வடிவுக்கரசியும் ரயில் நிலையத்திற்கு வர தயாரிப்பு நிறுவனம் அவருக்கு முதல் க்ளாஸ் டிக்கெட்டை புக் செய்யவில்லையாம். அந்த கோவத்தில் கிளம்பி வந்திருக்கிறார் வடிவுக்கரசி.

bharathi2_cine

அன்று இரவு பாரதிராஜா தன் டெக்னிஷியன்களுடன் இந்த அம்மா கதாபாத்திரம் அந்த அளவுக்கு வெயிட் ஆனது இல்லை. அதனால் வடிவுக்கரசி வேண்டாம். ஒட்டன்சத்திரத்திலயே ஏதாவது ஒரு பெண்ணை நடிக்கவைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வர மறு நாள் இதை வடிவுக்கரசி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு செய்தியை சொல்ல சித்ராலட்சுமணனை அனுப்பியிருக்கிறார் பாரதிராஜா.

bharathi3_cine

இவரும் வடிவுக்கரசியை பார்த்து விஷயத்தை சொல்ல ஏற்கெனவே கோவத்தில் இருந்தவர் இதை கேட்டதும் ஹோட்டல் வாசலிலயே ருத்ரதாண்டம் ஆடி அழுது புலம்பியிருக்கிறார். அன்று அவரது பிறந்த நாள் வேற. இதை கேட்டதும் பாரதிராஜா இப்படி சொல்லியிருக்க மாட்டார். நேற்று ரயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தால் தான் என்னை வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று சித்ராவிடம் சண்டை போட்டாராம் வடிவுக்கரசி.

Next Story