Cinema History
பாரதிராஜா படத்துக்கு ஆடிஷன் போன சிரஞ்சீவி… ஆனால் செலக்ட் ஆனதோ தமிழின் முன்னணி நடிகர்… யார்ன்னு தெரியுமா??
1970,80களில் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பிசியான இயக்குனராக வலம் வந்தவர். பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படமான “16 வயதினிலே” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவர் தமிழில் பல முக்கிய வெற்றி திரைப்படங்களை இயக்கினார். குறிப்பாக கிராமத்துக் கதைகளுக்கு பெயர்போன இயக்குனராக திகழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் தெலுங்கின் டாப் நடிகரான சிரஞ்சீவி பாரதிராஜா இயக்க இருந்த ஒரு திரைப்படத்திற்கு ஆடிஷனுக்கு சென்றிருக்கிறார். அந்த நிகழ்வை குறித்து இப்போது பார்க்கலாம்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய நடிப்பு பள்ளியில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சுதாகர் ஆகியோர் சேர்ந்து படித்தனர். இதில் சிரஞ்சீவியும் சுதாகரும் ஒன்றாக ஒரே அறையில் தங்கியிருந்தார்களாம். அப்போது “16 வயதினிலே” என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்த பாரதிராஜா, அதனை தொடர்ந்து புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாராம்.
இதையும் படிங்க: கார்த்திக் செய்த ரகசிய திருமணம்… சினிமா காதலே தோத்திடும் போலயே!!
அப்போது சிரஞ்சீவியும், சுதாகரும் பாரதிராஜா இயக்க இருந்த புதிய படத்திற்கான ஆடிஷனுக்கு சென்றிருந்தார்களாம். அதில் சிரஞ்சீவியின் நடிப்பையும் சுதாகரின் நடிப்பையும் பார்த்த பாரதிராஜா, சுதாகரை தேர்ந்தெடுத்தாராம். அவ்வாறு பாரதிராஜா இயக்கிய திரைப்படம்தான் “கிழக்கே போகும் ரயில்”. இதில் சுதாகர், ராதிகா ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமானார்கள்.
எனினும் சிரஞ்சீவி “பிரனம் கரீடு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உருவாகி தற்போது தெலுங்கு ரசிகர்களின் மெகா ஸ்டாராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.