இதை மட்டும் செய்து தாங்களேன்... பாக்கியராஜ் கேட்ட உதவிக்கு மறுப்பு தெரிவித்த பாரதிராஜா..
தனது குருநாதர் பாரதிராஜாவிடம், கே.பாக்கியராஜ் தன் படத்திற்காக ஒரு உதவியை கேட்டார். ஆனால் பாரதிராஜா தன்னால் முடியாது என மறுத்துவிட்டாராம்.
கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான படம் அந்த ஏழு நாட்கள். இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தான் விரும்பி திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணுக்கு, முன்னாள் காதல் இருப்பதை அறிந்தார். கஷ்டமாக இருந்தாலும் தன் மனைவியை அவரது காதலரிடமே சேர்த்துவைத்தார் என்ற கதையே அந்த ஏழு நாட்கள் படத்தின் திரைக்கதையாக அமைந்தது.
இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அம்பிகா அழுது நடிக்க வேண்டும். ஆனால் அவருக்கே தன்னால் முடியுமா என சந்தேகம் வந்தது. குரு பாரதிராஜாவிடமே இந்த பிரச்சனையை எடுத்து சென்றார். இந்த கிளைமேக்ஸ் காட்சியினை மட்டும் இயக்கி கொடுக்க முடியுமா என உதவியை கேட்டார்.
ஆனால் பாரதிராஜா படத்தின் மற்ற சீன்களை பார்த்து விட்டார். என்னப்பா எவ்வளவு அழகா காட்சிகளை இயக்கி இருக்க உன்னால் பண்ண முடியும். நான் வந்தா இது என்னால் நடந்தது என ஆகிவிடும். இது உனக்கான வெற்றி என மறுத்து விட்டாராம். இதை தொடர்ந்து வெளியான படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றதும், கிளைமேக்ஸ் காட்சி மிகப்பெரிய பாராட்டினை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.