Cinema History
பாரதிராஜா பார்த்த வேலை..!ஒருநாள் முழுக்க அழுத ரேவதி..! இவர் இப்படிப்பட்டவரா..?
தமிழ் சினிமா உலகில் திரைப்படங்களுக்கு சரியான வரைமுறையை வகுத்தவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் சீர்திருத்தவாதி என்றும் இவரை அழைப்பார்கள். தமிழ் சினிமா என்றாலே நலிந்து போனது என்று சொன்னவர்களின் மத்தியில் பதினாறு வயதினிலே என்னும் திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவை உயர்த்திய பெருமை இயக்குனர் சிகரம் பாரதிராஜாவை சேரும்.
”தமிழ் சினிமா என்று ஒரு வண்டி நின்று கொண்டிருந்த சமயத்தில் அதை பெட்ரோல் போட்டு ஓட செய்தவன் இந்த பாரதிராஜா” என்று கவிஞர் வாலி இவரை பாராட்டிருப்பார். தமிழ் சினிமாவை பதினாறு வயதிலேயேக்கு முன் பதினாறு வயதிலேயே பின் என வேறுபடுத்தி பார்க்கலாம்.
பல அறிமுக நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த பெருமை இவரை சேரும். அப்படி 1983 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுக நடிகராக பாண்டியன் மற்றும் ரேவதி ஆகியோர் நடித்த திரைப்படம் ”மண்வாசனை”. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் வெற்றி பெற்று படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது.
மதுரையில் வலையில் விற்று கொண்டிருந்த பாண்டியனை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார். பின்னர் கதாநாயகிக்கான தேடலின் போது ஷோபனா இப்படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலையின் காரணமாக இந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின் பாரதிராஜாவால் கண்டெடுக்கப்பட்ட ஆஷா கெலுன்னி நாயரை இப்படத்தில் நடிக்க வைத்தனர். அவர்தான் ரேவதியாக அறிமுகமானார். படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் அறிமுகப்படுத்திய மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த கதாநாயகியாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி கதாநாயக உருவெடுத்தார்.
தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தமிழ் திரை உலகில் கமல்,விஜயகாந்த்,பிரபு,மைக் மோகன் போன்றவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இருந்த போதிலும் ரஜினியுடன் ஒரே ஒரு படம் மட்டும் நடித்தது இன்று வரை குறையாக காணப்படுகிறது. அதன்பின்பு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2002 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். ரேவதி தற்போது விளம்பரப் படங்களை இயக்குவது குணச்சித்திர வேடங்களில் நடிப்பது என இவருடைய திரை உலக வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முதல் படமான மண்வாசனையில் இவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குனர் பாரதிராஜாவுக்கும் இடையே பல சலசலப்புகள் நடந்துள்ளது. அதில் பாரதிராஜா சொன்னபடி பாண்டியன் உண்மையாகவே ரேவதியின் கன்னத்தில் அறைந்தது. இது மிகப்பெரிய பேசும் பொருளாக பார்க்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க மற்றும் சம்பவமாக ஒரு நாள் முழுக்க ரேவதியை அழ வைத்து வேடிக்கை பார்த்துள்ளார் பாரதிராஜா. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலின் ஒரு காட்சியாக ஆற்றங்கரையில் குளிப்பது போல் காட்சி அளிக்க பட குழு திட்டமிட்டு இருந்தது. இதற்காக பாரதிராஜா ரேவதியிடம் ”கிராமத்து பெண்களை போல் ரவிக்கை அணியாமல் மார்பு வரை சேலையை கட்டிக்கொண்டு குளிக்க வேண்டும் ”என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ரேவதி அதெல்லாம் முடியாது என்று அழுது கொண்டு ஒத்த காலில் நின்றார். இதநாள் சிறிது நேரம் படப்பிடிப்பு தடைப்பட்டது. பின்னர் பாரதிராஜா தனியாக இல்லாமல் சில பெண்களை கூட்டு சேர்த்து அவர்களுடன் சேர்ந்து குளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ரேவதியும் அரைகுறை மனதோடு நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார். ரேவதி தனியாக இல்லாமல் கூட்டு சேர்ந்து குளித்து கொண்டிருக்கும் சமயத்தில் பாரதிராஜா அந்தக் காட்சியை ஒளிப்பதிவு செய்துவிட்டார். பின்னர் படத்தை பார்க்கும் போது தான் தெரிந்தது ரேவதி மட்டும்தான் படம் பிடித்துள்ளார் என்று. இதைப் பார்த்த ரேவதி பாரதிராஜா என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்