Cinema History
தாமதமாக வந்து வாங்கிகட்டிய ராதா… கடுப்பான நடிகர் திலகம்… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?…
Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் தனக்கென மிகப்பெரிய இடத்தை தக்கவைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் தமிழில் பராசக்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படமே இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்தது.
நடிப்பின் பல்கலைகழகமாகவே திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். ஆரம்பத்தில் பல நாடகங்களில் நடித்து கொண்டிருந்த இவர் பின் தனது முயற்சியினால் சினிமாவில் கால் பதித்தார். பலவகை குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சிவாஜி கணேசன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இதையும் வாசிங்க:முதல் நாள் படப்பிடிப்பு.. தடுமாறிய சிவாஜி ராவ்!.. அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்!…
இவர் நடிப்பில் வெளியான பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் இன்று வரையும் இவர் பெயரை பறைசாற்றுகின்றன. இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் முதல் மரியாதை. அப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கினார். இப்படத்தில் ராதா, வடிவுகரசி போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
ஒரு நாள் இப்படத்தின் படபிடிப்பின்போது இயக்குனர் படபிடிப்பை அதிகாலை 4 மணிக்கு ஆரம்பிக்கவிருந்ததாம். அப்போது இயக்குனர் படத்தில் நடிப்பவர்கள் அனைவரையும் காலையிலேயே வர சொன்னாராம். அனைத்து நடிகர்களும் சரியான நேரத்திற்கு வந்தனராம்.
இதையும் வாசிங்க:என்ன பிரபுதேவா நடிக்க வேண்டியதா? பல சித்து வேலைகள் நடந்து விஜய் படமாக மாறிய சம்பவம் – அட இந்தப் படமா?
ஆனால் சிவாஜியும், ராதாவும் படபிடிப்பிற்கு வரவில்லையாம். பின் ஒரு 4.30 மணியளவில் ராதாவின் கார் வந்து நின்றதாம். அதை பார்த்த இயக்குனர் ராதாவை சரமாரியாக திட்டினாராம். ராதாவின் கண்களே கலங்கிவிட்டதாம். அந்த நேரத்தில் பின்புறத்தில் இருந்து சிவாஜியின் குரல் கேட்டதாம்.
காலையில் நாங்கள் தங்கியிருந்த அறையில் தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வந்த உடனேயே குளித்துவிட்டு கிளம்பி வந்துள்ளோம். அதனால் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என அவர் கூறியுள்ளார். சிவாஜியின் குரல் கேட்கவும் பாரதிராஜாவுக்கு சற்று பயமாக ஆகிவிட்டதாம். பின்னர் அந்நாளின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் பாரதிராஜா. ஆனால் அன்று சிவாஜி தாமதமாகி வந்ததால் காலை படப்பிடிப்புக்கு வந்தவர் மறுநாள் காலை 3 மணி வரை படபிடிப்பில் தொடர்ந்து நடித்தாராம்.
இதையும் வாசிங்க:ஏன்டா இப்படி பண்ணிட்டீங்க.. மனசு உடைந்து திடீரென கதறி அழுத மீசை ராஜேந்திரன்!.. ஏன் தெரியுமா?..