யோவ் என்னய்யா பண்ணி வச்சிருக்க? கடிந்து கொண்ட பாரதிராஜா.. மணிவண்ணன் தியேட்டரில் செஞ்ச சம்பவம்
Bharathiraja: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சிகரம் பாரதிராஜா. கிராமத்து கதைகளை ஒன்றிணைத்து அதில் உள்ள உறவுமுறைகளோடு படங்களை கொடுப்பதில் தலை சிறந்த இயக்குனராக வலம் வந்தவர் பாரதிராஜா.
16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமான பாரதிராஜா முதல் படத்திலேயே யார் இவர் என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். பொதுவாக பாரதிராஜாவின் படங்களில் நடிகர் நடிகைகளின் தேர்வு கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கும்.
இதையும் படிங்க: மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளை நாலே வரிகளில் அடக்கிய கவியரசர்!.. எந்தப்படம்னு தெரியுமா?
அதற்கு பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கும். உதாரணமாக ராதிகாவை எப்படி அறிமுகம் செய்தார்? கார்த்திக்கை எப்படி அறிமுகம் செய்தார் என்ற கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். பின்னாளில் அவர்களின் மார்கெட் உயர்ந்தே போனது என்பது வேறு கதை.
இந்த நிலையில் பாரதிராஜாவின் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பாக வெளிவந்த படம் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம். இந்தப் படத்தில் கார்த்திக் மற்றும் ராதா இருவரையும் அறிமுகம் செய்தவர் பாரதிராஜா. இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் மணி வண்ணனாம்.
இதையும் படிங்க: பாடி சேஃப் பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!.. பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறிய ரம்யா பாண்டியன்!…
படத்தின் ஒளிப்பதிவாளர் அசோக் ராஜன் கூறும் போது ஒரு நான்கு பக்கத்திற்கு மணிவண்ணன் டையலாக் பேப்பரை வந்து கொடுப்பாராம். அதை பார்த்ததும் பாரதிராஜா ‘இதென்ன டையலாக்கா? இவ்ளோ பேப்பரில் வந்து கொடுக்கிற. போய் ஒரே பக்கத்தில் எழுதி கொண்டுவா’ என அவர் எழுதியதில் பாதியை கட் செய்தும் விடுவாராம்.
இதில் கடுப்பாகி மணிவண்ணன் ஒளிப்பதிவாளரிடம் வந்து புலம்புவாராம். ஒரு வழியாக படத்தின் ப்ரீவியூ காட்சியை பார்க்க ஒட்டுமொத்த படக்குழுவும் தியேட்டருக்கு போக அங்கே ஒவ்வொரு வசனத்திற்கும் ரசிகர்கள் விசில் அடித்து கத்தினார்களாம். இதை பார்த்ததும் மணிவண்ணன் ஆனந்தத்தில் கதறி அழுதாராம்.
இதையும் படிங்க: காதலியா நினைக்கனுமா? த்ரிஷா பத்தி மிஷ்கின் சொன்னதை கேளுங்க.. இதுதான் அல்டிமேட்