vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். குழந்தைகள் முதல் பெரியோர் வரை இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இன்றைய தமிழ் சினிமாவில் இவருடைய மார்க்கெட் பிசினஸ் ரஜினி, கமலை விட பல மடங்கு முன்னிலை பெற்று வசூலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் விஜய். தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் களமிறங்கியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தான் தற்போது நடித்து வரும் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜனநாயகன்” படம் தான் தனது கடைசி படம் என்று தெரிவித்துள்ளார். இதன் பிறகு இனி படங்களில் நடிக்கப் போவதில்லை எனவும் என்னுடைய முழு கவனத்தையும் இனி அரசியலில் செலுத்துப் போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவிப்பு கொடுத்தார். அதன்படி ஜனநாயகன் படத்தை நடித்து முடித்துவிட்டு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்காக களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கட்சி ஆரம்பித்ததும் தனது முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதில் கொள்கை, கோட்பாடு, யார் யார் எங்களுடைய கட்சி தலைவர்கள் என பலவற்றை அறிவித்தார். ஒரு பக்கம் விஜய் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தாலும் மறுபக்கம் அதற்கு பல விமர்சனங்கள் வந்ததுண்டு. இந்நிலையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயை பற்றி இயக்குனர் இமயம் பாரதிராஜா சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்தவர் பாரதிராஜா. சீர்திருத்த சினிமாவாக மக்களின் வாழ்வியலோடு படங்களை எடுத்து அதன் மூலம் வெற்றி அடைந்தார். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ஜொலிக்கிறார்கள்.
எந்த ஒரு நடிகர், நடிகைக்கும் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒரு முறையாவது நடித்து விட வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருக்கும். இந்நிலையில் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் பாரதிராஜா அதில் ”ஆரம்பத்தில் நான் விஜயை ரிஜெக்ட் பண்ணிட்டேன். இன்னைக்கு அவர்தான் நாம்பர் 1 ஹீரோ. இன்றைக்கு சினிமாவில் ஜெயிச்சுட்டாரு, நாளைக்கு கண்டிப்பா அரசியலிலும் ஜெயிப்பார்”. என பாரதிராஜா சமீபத்திய பேட்டியில் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…