என்ன விட்ருங்கடா!.. நான் போறேன்... ‘பாண்டியநாடு’ படத்தில் நடித்த பாரதிராஜாவின் சோகக்கதை!..

by Rohini |   ( Updated:2023-01-05 04:20:21  )
bharathi raja
X

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால். லட்சுமி மேனன் நடிப்பில் உருவான படம் தான் ‘பாண்டியநாடு’ திரைப்படம். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் சூரி, இயக்குனர் பாரதிராஜா, நடிகை கீர்த்தி ஷெட்டி, நடிகர் விக்ராந்த் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

இமான் இசையில் வெளிவந்த பாண்டிய நாடு திரைப்படத்தை விஷால் தான் தயாரிந்திருந்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றியும் பெற்றது. சுசீந்திரன் கெரியரிலயும் பாண்டிய நாடு திரைப்படம் முக்கிய அங்கம் வகிக்கக் கூடிய திரைப்படமாக மாறியது. காரணம் பாரதிராஜா.

vishal1

bharathiraja

இந்த படத்தில் பாரதிராஜாவை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று போராடியிருக்கின்றனராம். அவரிடம் கதையை சொல்லி கதை பாரதிராஜாவுக்கு பிடித்துப் போக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். படப்பிடிப்பிற்கு வந்ததில் இருந்து என்னமோ போல தான் இருந்தாராம் பாரதிராஜா.

இதையும் படிங்க : “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா”… இந்த கிளாசிக் காமெடி எப்படி உருவாச்சி தெரியுமா?? கேட்டா அசந்திடுவீங்க..

நிறைய வசனங்கள் கொடுப்பார்கள் , நிறைய டையலாக்குகள் பேசவேண்டும் என்ற ஆசையில் வந்திருக்கிறார் இயக்குனர் இமயம். ஆனால் படத்தில் ஒரு சின்ன குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் காட்சி. அந்த குழந்தையிடம் பேசுவது மாதிரியான வகையில் தான் வசனங்கள் கொடுத்தார்களாம். என்னடா ஒரு டையலாக்கும் கொடுக்க மாட்டிங்கீங்க, சும்மாவே உட்கார வைச்சிருக்கீங்க என்ற தொணியில் இனிமே இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவந்தாராம்.

vishal2

vishal2

மேலும் நான்கு நாள்கள் வந்து நடிச்சிருக்கிறேன். இப்பொழுது விலகிக் கொள்கிறேன். அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றெல்லாம் கூறியிருக்கிறாராம். விஷாலும் அவர் தான் மாட்டேன் என்று சொல்கிறாரே விட்டு விடுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் சுசீந்திரன் அவர் தான் நடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றிருக்கிறார்.

படப்பிடிப்பு ஆரம்பமான முதலே பாரதிராஜாவுக்கும் சுசீந்திரனுக்கும் சில பல முரண்பாடுகள் இருந்து கொண்டே வந்திருக்கின்றன. ஒரு வழியாக பாரதிராஜாவை வைத்து படத்தையும் எடுத்து விட்டனர். படத்தின் க்ளைமாக்ஸ் பாரதிராஜாவோடு தான் முடிவடையும். படம் பார்த்த அனைவரும் பாரதிராஜாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர் என்று சுசீந்திரன் கூறினார்.

vikram2

suseenthiran

Next Story