தமிழ் சினிமா ரசிகர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பாரதிராஜா இந்த ஆண்டு (2026) ஜூன் மாதம் காலமானார்.
பாரதிராஜா – ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் காம்பினேஷனில் 1978-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. க்ரைம் த்ரில்லர் ஜானர் படமான இதில் ஶ்ரீதேவி தான் ஹீரோயின். சீரியல் கில்லர் கேரக்டரில் கமல் நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

1980-ஆம் ஆண்டு இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘ரெட் ரோஸ்’ (Red Rose) வெளியானது. இதையும் பாரதிராஜா தான் இயக்கினார். இதில் ஹீரோவாக ராஜேஷ் கன்னாவும், ஹீரோயினாக பூனம் தில்லானும் நடித்திருந்தனர்.
2020-ஆம் ஆண்டு பாரதிராஜா தனது யூடியூப் சேனலில் கொடுத்த ஒரு பேட்டியில் ‘ரெட் ரோஸ்’ படம் குறித்து பேசுகையில் “‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ஹிந்தில ராஜேஷ் கன்னாவை வச்சு பண்ணுனேன்.

சென்னையில் அதோட ஷூட்டிங் நடக்கும்போது, ஒரு நாள் எனக்கும், ராஜேஷ் கன்னாவுக்கும் சின்ன பிரச்சனை ஆயிடுச்சு. என்னன்னா, ஒரு ஷாட் எடுக்கும்போது, Why not I do like this-ன்னு சொன்னாரு. நான் ஓகேன்னு சொன்னேன். அப்புறம் I will do like this jump-ன்னு சொன்னாரு.
அதுக்கப்புறம் என்ன பண்ணுவீங்கன்னு கேட்க, மறுபடியும் நான் இது பண்ணுவேன், அது பண்ணுவேன்னு சொன்னாரு. நான் You direct yourself-ன்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன். அந்த படத்தோட தயாரிப்பாளர்கள் ஆடிப் போயிட்டாங்க. அடுத்த ரெண்டு நாளுக்கு ஷூட்டிங் இல்ல.

பாம்பேல இருந்து ராஜேஷ் கன்னாவோட மனைவி டிம்பிள் கபாடியா வந்தாங்க. அந்த காலத்துல பேரழகான நடிகை. அந்த அம்மா என்கிட்ட வந்து, you are my brother. forget everything. நீங்க என்ன சொல்றீங்களோ ராஜேஷ் கன்னா அதை பண்ணுவாருன்னு சொல்லி என்னை சமாதானம் பண்ணி எனக்கு ஒரு வாட்ச் வாங்கிட்டு வந்து கட்டிவிட்டாங்க. அப்புறமா தான் ஷூட்டிங் போனேன்” என்று கூறியிருந்தார்.







