மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பாரதிராஜா… படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக திகழ்ந்த பாரதிராஜா, பல தமிழ் இயக்குனர்களுக்கு முன்னோடியாக திகந்து வருகிறார். குறிப்பாக கிராமத்து கதைகளை தமிழில் அறிமுகப்படுத்தியதே பாரதிராஜாதான் என்று கூறுவார்கள்.
குறிப்பாக அது வரை இருந்த தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர் பாரதிராஜாதான். ஸ்டூடியோவுக்குள்ளேயே முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியே கொண்டு வந்தவரும் இயக்குனர் இமயம்தான்.
பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படமான “16 வயதினிலே” திரைப்படமே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவின் வரலாற்றையே புரட்டிப்போட்டது என்று கூட சொல்லலாம். அதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் இயக்கிய பாரதிராஜா, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக மாறிப்போனார்.
எனினும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு பாரதிராஜா திரைப்படங்களை இயக்குவதை நிறுத்திக்கொண்டார். அதன் பின் பல திரைப்படங்களில் பாரதிராஜா நடிக்க தொடங்கிவிட்டார். “ஆய்த எழுத்து”, “பாண்டிய நாடு”, “குரங்கு பொம்மை”, “திருச்சிற்றம்பலம்” ஆகிய திரைப்படங்களில் அவரின் நடிப்பு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
இந்த நிலையில் தங்கர் பச்சான் தற்போது இயக்கியுள்ள “கருமேகங்கள் கலைகின்றன” என்ற படத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படம்தான் தான் நடிக்கும் கடைசி திரைப்படம் எனவும் கூறியிருந்தார் பாரதிராஜா.
எனினும் பாரதிராஜா குறித்து தற்போது ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாரதிராஜா ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். அந்த திரைப்படத்திற்கு “தாய்மை” என்று பெயர் வைத்திருக்கிறாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தேனீயில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாரதிராஜா கடந்த 2020 ஆம் ஆண்டு “மீண்டும் ஒரு மரியாதை” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைபடத்திற்கு பிறகு தற்போது “தாய்மை” என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அயோத்தி கதை திருடப்பட்டது இப்படித்தான்… பிரபல திரைக்கதை ஆசிரியர் சொன்ன அதிர்ச்சி தகவல்…