Cinema History
இளையராஜா கிண்டல்… பாரதிராஜா சவாலாய் எடுத்த படம்… எல்லாம் சரிதான்… ஹீரோ இவரா?
தமிழில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த சிகப்பு ரோஜாக்கள் படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட முடியாது. அது ஒரு செம கிரைம் திரில்லர் கதை. இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் சீட்டின் நுனியில் இருந்து தான் பார்ப்பார்கள்.
இளையராஜா பாரதிராஜாவிடம் சும்மா விளையாட்டுக்குப் பேசினாராம். உனக்கு கிராமத்துக் கதை தான் எடுக்கத் தெரியும். அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு பாரதிராஜா உருவான ஸ்கிரிப்ட் தான் சிவப்பு ரோஜாக்கள். இது முற்றிலும் மாறுபட்ட சைக்கோ திரில்லர் கதை.
கமல் தான் இந்தப் படத்தில் ஹீரோ. ஆனால் பாரதிராஜாவின் முதல் சாய்ஸ் சிவகுமார் தானாம். அதற்கு அசிஸ்டண்ட் டைரக்டர்கள் எல்லாரும் ஒத்துக்கலையாம். பாக்கியராஜ் கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தாராம். சிவகுமாரை ஹீரோவாகப் போட்டால் படம் அவ்வளவு தான் என்றார்.
ஆனால் பாரதிராஜாவோ சிவகுமாரிடம் போய் கதை சொன்னாராம். அதற்கு கதை நல்லா தான் இருக்கு. ஆனா நான் நடிச்சா இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்காது என்று மனசாட்சியோடு ஒத்துக்கிட்டாராம். அதன்பிறகு தான் அந்தப் படத்தில் கமல் ஹீரோவானார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
1978ல் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர். அதிலும் கமல் பாடிய நினைவோ ஒரு பறவை இப்போது கேட்டாலும் சுகமே.
இதையும் படிங்க… அடடா மழைடா!.. தமன்னா எப்படி இருக்காரு பாருங்க!.. பையா 2 ஸ்டார்ட் பண்ற வழிய பாருங்க லிங்குசாமி!..
இந்தப் படத்தைப் பார்த்த இயக்குனர் கௌதம் மேனன் இதுவரை வந்த கிரைம் திரில்லர் படங்களில் சிகப்பு ரோஜாக்கள் தான் மாஸ். இதுவரை கிரைம் திரில்லர் என்றாலே சிகப்பு ரோஜாக்களைத் தான் சொன்னார்கள். இனி என்னோட நடுநிசி நாய்கள் படத்தை சொல்லப் போகிறார்கள். ஆனால் அந்தப் படத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது என்பது உங்களுக்கே தெரியும்.