பாரதிராஜா படத்தில் அவருக்கே தெரியாமல் நடித்த ’மல்லு‘ நடிகை...! எப்பேற்பட்ட படம்...? மானம் போயிருக்கும்...!

by Rohini |
bha
X

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்றாலே ஒரு தனிப்பெருமை உண்டு. கிராமத்தை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்கு இவருக்கு நிகர் இவர் தான். சினிமாவில் ஏகப்பட்ட நடிகைகளை அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இவருக்கு உண்டு.

bha1_cine

இவரது படைப்பில் ஒரு காவியமாக இன்றளவும் விளங்குகிற படம் என்றால் அது கிழக்கு சீமையிலே திரைப்படம் தான். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தில் ராதிகா, விஜயக்குமார், நெப்போலியன், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்திருப்பர்.

bha2_cine

இன்னொரு ஹீரோ, ஹீரோயினான விக்னேஷ், அஸ்வின் கதாபாத்திரத்திற்கான தேர்வில் தான் பாரதிராஜா சொதப்பி விட்டார். இவர்களுக்கு முன் 4 பேர் இந்த கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு போயிருக்கின்றனர். புதுமுகங்கள் வேண்டும் என்ற காரணத்தினால் அஸ்வினிக்கு முன் ஒரு நடிகை வந்தாராம். புதுமுகம் என்று சொல்லி வர பாரதிராஜாவும் நடிக்க வைத்திருக்கிறார்.

bha3_cine

ஆனால் நடிப்பதை பார்த்தால் புதுமுகம் மாதிரியே தெரியவில்லையாம். அந்த அளவுக்கு லைட் முன்னாடி உணர்ச்சி வசமாக நடிப்பது, எங்கெல்லாம் உணர்வுகளை வெளிப்படுத்தனுமோ சரியாக பண்ணினாராம். ஆனாலும் பாரதிராஜாவுக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்ததாம்.பாதி படப்பிடிப்பு முடிந்து சென்னை போக எடுத்த சீன்களை அங்கு சில பேருக்கு போட்டு காட்டியிருக்கிறார் பாரதிராஜா. அதில் ஒருவர் இந்த நடிகையை பார்த்ததும் சார் இந்த நடிகை மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறது. அதுவும் பெரும்பாலும் ப்ளூ ஃபிலிம்ஸ் படங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறது என்று கூறியதும் ஐய்யயோ தப்பு பண்ண நினைத்தோமே என்று அந்த நடிகையை விலக்கி விட்டாராம் பாரதிராஜா. ஏனெனில் கிழக்கு சீமையிலே படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு வேற எந்த உணர்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அந்த நடிகையை விலக்கி விட்டார்.

Next Story