ஹோட்டலில் பெண்ணுடன் அந்த நிலைமையில் இருந்த ’கிழக்கு சீமையிலே‘ பட ஹீரோ...! பாரதிராஜா எடுத்த அதிரடியான முடிவு...

தமிழ் சினிமாவில் காலங்காலமாக நிலைத்து நிற்கக்கூடிய படங்கள் வந்த வண்ணம் இருந்தாலும் இன்றும் நம் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய படமாக இருப்பது பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்குச்சீமையிலே திரைப்படம். பாசமலர் படத்திற்கு அடுத்தப்படியாக அண்ணன் தங்கை பாசத்தை தத்ரூபமாக காட்டியிருப்பார் இயக்குனர்.
இந்தப் படத்தில் தங்கையாக ராதிகாவும் அண்ணனாக விஜயக்குமாரும் பிரம்மாதமாக நடித்திருப்பர். அதுபோக நடிகர் நெப்போலியன் , விக்னேஷ், அஸ்வினி, வடிவேலு உட்பட பல நடிகர்களும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ராதிகாவின் மகளாகவும், விஜய்க்குமாரின் மகனாகவும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என கருதி விக்னேஷுக்கு முன் அவர் கதாபாத்திரத்தில் நடித்தவர் இன்று பிரபலமாக இருக்கும் நடிகர் பிரேம். மூன்று நாள்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டவர் நான்காவது நாள் எல்லாரும் காத்திருக்க பிரேம் வரவில்லையாம்.
விசாரித்ததில் ஹோட்டலில் யாரோ ஒரு பெண்ணுடன் தங்கியிருந்ததாகவும் இப்போது தான் மதுரை பஸ்ஸில் ஏறிச்சென்றதாகவும் செய்தி பாரதிராஜாவுக்கு தெரியவந்தது. அன்று நடைபெற இருந்த படப்பிடிப்பு ரத்தாக மறுநாள் பிரேம் படப்பிடிப்பிற்கு வந்தாராம். அவரை பார்த்ததும் பாரதிராஜாவுக்கு கோபம் தலைக்கேற அறிமுகமான முதல் படத்திலயே ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் சேர்ந்து இருந்திருக்க? அதுவும் அவ கூட எங்கேயோ போயிட்டு வந்துருக்க என கூற பிரேம் சார் அவள் என் மனைவி என்று சொன்னாராம். மனைவியா என்று ஆச்சரியத்துடன் பார்த்த பாரதிராஜாவுக்கு இருந்தாலும் மனசு ஒத்துழைக்காமல் பிரேம்மை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம்.