அவனுக்கு ஒன்னுமே தெரியாது!.. பாரதிராஜாவை பற்றி ஜெ.விடம் சொன்ன நபர்!. ஒரு நல்ல படம் போச்சே!...

by சிவா |
jayalalithaa
X

சினிமாவில் ஒருவரை அவ்வளவு சீக்கிரம் முன்னேற விட மாட்டார்கள். அதுவும் சினிமாவை இயக்கும் வாய்ப்பு கிடைக்க போராட வேண்டும். முதலில் ஒரு இயக்குனரிடம் சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்ய வேண்டும். அப்போது தயாரிப்பாளருக்கு நம் மீது நம்பிக்கை வரவேண்டும்.

அதேபோல், ஹீரோக்களுடன் நெருங்கி பழகி அவர்களின் நம்பிக்கையை பெறவேண்டும். அதோடு, ‘நீங்கள் எடுக்கும் முதல் படத்தில் நான்தான் ஹீரோ’ என அந்த நடிகரை சொல்ல வைக்க வேண்டும். உண்மையான திறமை இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும். அதோடு மட்டும் முடிந்துவிடாது.

இதையும் படிங்க: இத்தனை அவார்டுகளை வாங்கி என்ன பயன்? பாரதிராஜாவுக்குள் இருக்கும் ஆறாத வலி என்ன தெரியுமா?

கதை எல்லாம் சொல்லி ஹீரோவுக்கு பிடித்து தயாரிப்பாளர் சம்மதித்து படம் டேக் ஆப் ஆகும் நிலையில், நடிகரையும், தயாரிப்பாளரையும் சிலர் குழப்பிவிடுவார்கள். ‘அவனுக்கு படமெடுக்க தெரியாது. எதுக்கு அவன வச்சி படமெடுத்து ரிஸ்க் எடுக்குறீங்க?’ என போட்டு விடுவார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் ஒரு இயக்குனர் உருவாக வேண்டும்.

தமிழ் சினிமாவில் மண் வாசனை மிக்க இயல்பான கிராமத்து படங்களை இயக்கியவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே படத்தில் துவங்கிய இவரின் பயணம் பல வருடங்கள் நீடித்தது. கிழக்கே போகும் ரயில், மண் வாசனை, புதுமைப்பெண், கடலோர கவிதைகள், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என பல அற்புதமான படைப்புகளை கொடுத்தவர்.

இதையும் படிங்க: பாரதிராஜாவை நம்பாத பாக்கியராஜ்… அப்படி என்ன நடந்தது இந்த சிஷ்யனுக்கு..?

பாரதிராஜா உண்மையிலேயே முதலில் இயக்கவிருந்த கதை பதினாறு வயதினிலே இல்லை என்பது பலருக்கும் தெரியாது. கதாசிரியர் செல்வராஜ் எழுதிய சொந்த வீடு என்கிற கதையைத்தான் அவர் முதல் படமாக எடுக்க திட்டமிட்டிருந்தார். இந்த கதையை ஜெயலலிதாவிடம் சொல்லி 28 நாட்கள் கால்ஷீட்டும் வாங்கிவிட்டார். முத்துராமன் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது.

ஷூட்டிங் கிளம்பும் நேரத்தில் ஒருவர் ஜெயலலிதாவிடம் ‘அவனுக்கு கிளாப் போர்டு அடிக்க கூட தெரியாது. சின்ன பையன் அவன். அவனுக்கு சரியா படமெடுக்க தெரியாது’ என பற்ற வைக்க படம் டிராப் ஆனது. அதன்பின்னரே பதினாறு வயதினிலே படத்தை எடுத்தார் பாரதிராஜா. ஆனாலும், ‘சொந்த வீடு’ கதை அவருக்குள் ஓடிக்கொண்டே இருக்க பின்னாளில் ரேவதி, பாண்டியனை வைத்து ‘புதுமைப் பெண்’ என்கிற தலைப்பில் அந்த கதையை படமாக எடுத்தார் பாரதிராஜா.

Next Story