
Cinema History
சிஷ்ய பிள்ளைகளுக்கு மட்டும் பாரதிராஜா சொல்லிக்கொடுத்த வித்தை! என்னன்னு தெரியுமா?
கிராமப்புறத்தில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை முறையை சினிமாவிற்குள் கொண்டு வந்து அதன் மூலம் பாமர மக்களிடமும் செல்வாக்கை பெற்றவர் இயக்குனர் பாரதிராஜா.
பாரதிராஜா 16 வயதினிலே படத்தில் ஹிட் கொடுத்ததுமே அவரிடம் பட வாய்ப்புகள் குவிந்தன என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பாரதிராஜாவிடம் தயாரிப்பாளர் பட வாய்ப்பு கொடுப்பதற்கு அவரது ஈடுபாடே முக்கிய காரணமாக இருந்தது.

bharathiraja
மேலும் கிராமம் சார்ந்த படம் என்பதால் பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களுக்கு அதிக செல்வாவது இல்லை. மேலும் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்க கூடாது என குறிப்பிட்ட ரீல்களுக்குள் மொத்த படத்தையும் எடுத்துவிடுவார் பாரதிராஜா. பல தமிழ் இயக்குனர்களையும் நடிகர் நடிகைகளையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா.
உதவி இயக்குனர்களுக்கு சொல்லிக்கொடுத்த வித்தை:
நடிகர் சுதாகர், நடிகை ரேவதி, ராதிகா, மனோபாலா, பாக்கியராஜ் என பலரையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. அவர் படம் எடுக்கும்போது இயக்குனர்களுக்கு முக்கிய அறிவுரையாக அவர் ஒரு விஷயத்தை கூறினார்.

bhagyaraj
அதாவது குறிப்பிட்ட ரீல்களுக்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும். ஏனெனில் அப்போது படத்தில் அதிக செலவு படப்பிடிப்பு செய்யும் பிலிம் ரீல்களுக்குதான் ஆகும். எனவே இயக்குனர்கள் அந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம். இதை அனைத்து உதவி இயக்குனர்களுக்கும் சொல்லி கொடுத்திருந்தார் பாரதிராஜா.
இதனால்தான் பாரதிராஜாவின் இயக்குனர்களுக்கும் கூட உடனே வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: நான் சினிமாவிற்கு வந்தப்போ சிவாஜி ரொம்ப கஷ்டப்பட்டார்!.. ரகசியத்தை உடைத்த பாக்கியராஜ்…