Categories: Cinema History Cinema News latest news

பாரதிராஜாவுக்கே ஐடியா கொடுத்த நடிகர்… முதல் படமே தோல்வி… இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் சில படங்கள் என்றுமே காலத்தில் அழியாமல் நிற்கும் 20 வருடம் கழித்து பார்த்தால் கூட ஒரு ப்ரஷ் லுக்கிலேயே இருக்கும். அப்படிபட்ட படங்களின் பட்டியலில் ஒன்று தான் பாரதிராஜா இயக்கிய காதல் ஓவியம். இந்த படத்தில் கண்ணனாக நடித்த சுனில் தன்னுடைய சினிமா நினைவுகளை சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த பேட்டியில் இருந்து, நான் முதன்முதலில் பட வாய்ப்புக்காக சென்ற போது பாரதிராஜாவும் எஸ்.பி.பியும் அமர்ந்து ஒருபாடலை இயற்றி கொண்டு இருந்தனர். அந்த பாடலை கேட்ட போது நல்லா இருக்கே என அசந்து விட்டேன். ஆனால் என்ன படம் என தெரியவில்லை.

இதையும் படிங்க : ஆதியோகி சிலைக்கான அனுமதி: ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய ஈஷா!

அப்போது என்னை ஒரு உதவியாளர் வந்து அழைத்தார். அது பெங்காலி படம் தான். ஆனால் என்னை பார்த்த போது அவர்களுக்கு அந்த படத்துக்கு நான் செட்டாகவில்லை. வேண்டாம் எனச் சொல்லிக்கொண்டு இருக்கும் போது இன்னும் சிலர் என்னை அழைத்தனர். அவர்கள் எனக்கு பாரதிராஜாவை தெரியுமா என்றனர். யாருக்கு கடவுளை தெரியாது என்றேன். ஸ்டெல்லா மேரிஸ் தெரியுமா என்றனர். 21 பையன் நானு எனக்கு நான் ஆம்பள தானு கேட்டேன். கொஞ்ச நேரம் கழித்து என்னை அட்லாண்டிக் ஹோட்டல் வர சொன்னார்கள்.

எனக்கு அது ஜோக் என்பது போல நினைத்து கொண்டே அங்கு சென்றேன். அப்போது தான் நான் பாரதிராஜாவை நேரில் பார்த்தேன். 12 வயதில் தனியாக பார்த்த 16 வயதினிலே படத்தினை இயக்கிய பாரதிராஜா என்னை ஆடிஷன் செய்தார். நான் கேட்டு அசந்த அந்த பாடல் காதல் ஓவியம் படத்தில் தான் அமைந்து இருந்தது. அப்படத்தில் இருந்த சங்கீத ஜாதி முல்லை என்னுடைய ஸ்பெஷல் பாடல் தான்.

இதையும் படிங்க : 5 வருஷமா குப்பை கொட்டியும் கண்டுக்காத இளையராஜா – கைகொடுத்து தூக்கிய இசைப்புயல்

Published by
Akhilan