கலைஞரின் முகத்தில் ஃபைலை விட்டெறிந்த பாரதிராஜா.. நடந்தது இதுதான்!...
வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் கலைஞர் கருணாநிதி. அதன்பின் சில படங்களுக்கு கதை,திரைக்கதை,வசனமும் எழுதினார். சிவாஜி ஹீரோவாக நடித்த பராசக்தி படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம் எழுதிய கருணாநிதிதான். எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படமான ‘ராஜகுமாரி’ படத்திற்கும் கலைஞர்தான் வசனம் எழுதினார்.
இவருடன் திரையுலகை சேர்ந்த பலரும் நட்புடனும், மரியாதையுடன் பழகினர். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் கலைஞர் கருணாநிதியுடன் நட்பாக பழகினர். விஜயகாந்த், பாரதிராஜா உள்ளிட்ட சிலர் எம்.ஜி.ஆரிடன் மரியாதையுடன் பழகினார்கள். விஜயகாந்த், பாரதிராஜா போன்ற சிலர் கலைஞர் முதல்வராக இருந்த போதும் உடனே அவரை பார்க்கும் அளவுக்கு நல்ல உறவில் இருந்தனர்.
பாரதிராஜா மிகவும் கோபக்காரர். எதற்கும் உடனே உணர்ச்சிவசப்படும் நபர் அவர். பல சூழ்நிலைகளில் உணர்ச்சிவசப்பட்டு பேசி விடுவார். அதன்பின் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பும் கேட்டுவிடுவார். இதுபோல் பலமுறை அவர் நடந்துகொண்டதுண்டு.
இந்நிலையில், கலைஞருடன் நெருக்கமாக இருந்த நடிகர் தியாகு ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘கலைஞர் கருணாநிதி எப்போதும் பொறுமையாக இருப்பார். அவர் முன் யார் கோபமாக நடந்து கொண்டாலும் அவர் கோபப்பட மாட்டார். அதை சீரியஸாகவும் எடுத்துக்கொள்ள மாட்டார்.
ஒருமுறை பாரதிராஜா அவர் முன் கோபமாக நடந்து கொண்டார். ஒரு ஃபைலை கலைஞரின் முகத்தில் விட்டெறிந்தார். அப்போது அவர் முதல்வராக இருந்தார். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ஆனால், கலைஞர் கூலாக ‘கலைஞன் அப்படித்தான் உணர்ச்சிவசப்படுவான். இதற்கெல்லாம் கோபப்படக்கூடாது’ என என்னிடம் சொன்னார். சில நாட்களில் தன் தவறை உணர்ந்து பாரதிராஜா அவரிடம் மன்னிப்பும் கேட்டார்’ என தியாகு கூறினார்.