Connect with us
saravana store

நீங்கள் செய்தது சரியா? – டி.ராஜேந்திரை கண்டித்த பாரதிராஜா….

bharathi raja

Cinema News

நீங்கள் செய்தது சரியா? – டி.ராஜேந்திரை கண்டித்த பாரதிராஜா….

மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமையை மிகவும் குறைவான விலைக்கு விஜய் தொலைக்காட்சி கேட்டதால் அப்படம் வெளியாவதிலேயே சிக்கல் ஏற்பட்டது. எனவே, சாட்டிலைட் உரிமைக்கு பொறுப்பேற்றுக்கொண்டார் டி ராஜேந்தர். அதாவது பைனான்சியருக்கு உத்தரவாதம் கொடுத்தார். அதன்பின் பேரில் மாநாடு படம் வெளியானது.

அதன்பின் ரூ.8 கோடிக்கு மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கிக் கொண்டது. எனவே, தன்னிடம் கேட்காமல் எப்படி சேட்டிலைட் உரிமையை விற்கலாம் என டி ராஜேந்தர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

maanaadu

இந்நிலையில், இதை கண்டித்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படாததால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்தரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வர தாமதமானாலும் பரவாயில்லை, படத்தை வெளியிட அனுமதிப்பதாக நிதியாளர் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு உத்தரவாதம் தர முன்வந்தீர்கள். படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றியடைந்து, தொலைக்காட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனைத் திரும்பி தருகிறார். ஆனால் திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிக தவறான முன்னுதாரணம் ஆகும்.

maanaadu

ஜாமீன்தாரர் சொத்துகளுக்கு உரிமம் கோரமுடியுமா? திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா? ஒரு அமைப்பில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாகப் படத்தை வெளியிட முயற்சி செய்தது எந்தவிதத்தில் நியாயம்?

நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா? இதையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நஷ்டஈடு கேட்டு உங்கள் மீது வழக்கு தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்? வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்கு போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்குள்ளாக்கியிருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
To Top