துணிவு படத்தில் நடிக்கும் பிரபல காதல் ஜோடி...அப்போ செமயா இருக்குமே…

by சிவா |   ( Updated:2022-10-03 05:50:46  )
thunivu
X

நடிகர் அஜித்குமாரின் 61வது படம் “துணிவு”. இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தற்போது பாங்காகில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் அஜித்தின் பைக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

போனிகபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியரும் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, வீரா, மகாநதி சங்கர் போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசைஅமைத்துள்ளார்.

amir

ஏற்கனவே இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சிபி நடித்துள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன்2 வெற்றியாளர்களும் இளம் காதல் ஜோடிகளுமான அமீர் மற்றும் பாவனி இணைந்துள்ளனர்.

அஜித்தின் 61வது படமான இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு நமது கண்களுக்கு விருந்தாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Next Story