பவானி ரெட்டி 2வது திருமணம் செய்தது உண்மையா?....சகோதரி விளக்கம்..
தெலுங்கில் சில சீரியல்களிலும், தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளங்களி தனது புகைப்படங்களை
வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்துள்ளார். தன்னுடைய 21 வயதில் மாடலாக தனது வாழ்க்கைத் துவங்கினார் பவானி. தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 201 ல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், பிரதீப் குமார தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். அதன்பின் சீரியல்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். அதோடு, அவர் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் செய்தி வெளியிட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுபற்றி பகிர்ந்து கொண்ட பவானி ரெட்டி ‘என்னுடைய கணவர் இறந்தபோது அந்த அதிர்ச்சியில் இருந்து நான் வெளிவரவே இல்லை.எனக்கு அழுகையே வரவில்லை. குடும்பம், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ வேண்டிய சமயத்தில் என் கணவர் இறந்துவிட்டது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை’ என கதறி அழுதார்.
இந்நிலையில், பவானி ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் சகோதரி சிந்து வெளியிட்டுள்ள பதிவில் ‘பவானி பற்றி வெளியாகி வரும் பொய்யான செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். பிரதீப் குமாரின் திருமணத்திற்கு பின் பவானி 2வது திருமணம் செய்து கொள்ளவில்லை.
சமீபகாலமாக அவள் ஒருவரை விரும்பினாள். ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அவளுக்கு ஏற்படுத்தி கொடுக்க விரும்பினோம். ஆனால், சில பல காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் அவர்கள் பிரிந்துவிட்டனர். பவானி ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். எனவே, ஊடகங்கள் அவரின் தனிப்பட்ட
வாழ்க்கையை மதித்து மதிப்பு தரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்’என கோரிக்கை வைத்துள்ளார்.