ப்ப்பா!.. வேற லெவலில் வெறியேத்துறாரே!.. விடுதலை பட ஹீரோயினா இது?!..

நடிகை, மாடல் அழகி, பாடகி என பல முகங்களை கொண்டவர் பவானி ஸ்ரீ. இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகள் ஆவார். நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் சகோதரி. விஸ்வல் கம்யூனிகேஷன் படித்த இவருக்கு சினிமா இயக்குவதில் அதிக ஆர்வம் உண்டு.
எனவே, இயக்குனர் ஏ.எல்.விஜயிடம் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். சில குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார். அதன்பின் நடிப்பின் மீதும், மாடலிங் துறை மீதும் அவருக்கு ஆர்வம் வந்துவிட்டது. முதலில் ஒரு தெலுங்கு வெப் சீரியஸில் நடித்தார். விஜய் சேதுபதி நடித்த க.பெ. ரணசிங்கம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய ஆந்தாலஜி படமான புத்தம் புது காலையில் சில பாடல்களையும் இவர் பாடியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘விடுதலை’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மலையில் வசிக்கும் பெண்ணாகவும், சூரியின் மீது காதல் கொள்ளும் பெண்ணாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இப்போது நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், அழகான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
அந்தவகையில், பவானி ஸ்ரீயின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படங்களை பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.