உன்ன பாத்தாலே ஷாக் அடிக்குது!.. ஹை வோல்டேஜ் லுக்கில் அசத்தும் விடுதலை பட நாயகி...

by சிவா |
bhavani sree
X

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷின் சகோதரிதான் இந்த பவானி ஸ்ரீ. இசை மீது இருந்த ஆர்வத்தில் பாடகியாக மாறினார். 5 கதைகளாக வெளிவந்த ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜி படத்தில் அனைத்து பாடல்களையும் பாடியிருந்தார்.

bhavani

இவருக்கு சினிமா இயக்குவதிலும் அதிக ஆர்வம் உண்டு. இயக்கும் ஏ.எல்.விஜயிடன் உதவியாளராக வேலை செய்துள்ளார். இது என்ன மாயம் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார்.

bhavanisree

க/பெ ரணசிங்கம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதைவிட வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வெளியான விடுதலை படத்திலும் நடித்திருந்தார்.

bhavani

இந்த படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திவிட்டது. விடுதலை 2 படத்திலும் இவருக்கு அழுத்தமான கதாபாத்திரம் எனக்கூறப்படுகிறது.

bhavani

ஹை பிரீஸ்டஸ் எனும் தெலுங்கு வெப் சீரியஸிலும் நடித்தார். நடிப்பு, இசை, இயக்கம் என எல்லாவற்றிலும் இவருக்கு ஆர்வம் இருப்பதால் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

bhavani

மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள பவானி ஸ்ரீ நடிகைகள் போல அவ்வப்போது அழகான உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

bhavani

இந்நிலையில், பவானி ஸ்ரீயின் சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதோடு, ரசிகர்களையும் ஜொள்ளுவிட வைத்துள்ளது.

bhavani

Next Story