Cinema News
புற்றுநோயால் குரலை இழந்த பவதாரிணி!.. இசைஞானிக்கு இப்படி ஒரு சோகமா!..
bhavatharini: இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி. கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்கள் இருந்தாலும் மகள் மீது அதிக பாசம் கொண்டவர் இளையராஜா. சிறுவயதிலேயே பவதாரிணியை கீபோர்டு கற்றுக்கொள்ள அனுப்பினார் அவரின் அம்மா ஜீவா. ஒருகட்டத்தில் இளையராஜா மகளை ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்து போனார்.
அங்கு பாடகி வருவதற்கு முன்பு டிராக்கை ஒரு பாடகி பாடுவார். அந்த வாய்ப்பையும் மகளுக்கு கொடுத்தார் இளையராஜா. ஒருகட்டத்தில் அதிக டிராக்குகளை பாடினார். அதுவே அவருக்கு பெரிய மன அழுத்தத்தை உருவாக்கியது. சின்ன பெண்ணுக்கு இவ்வளவு வேலை கொடுக்காதீர்கள் என அவரின் அம்மா இளையராஜாவிடம் சொல்ல அது நின்று போனது.
இதையும் படிங்க: தோல்வியில் முடிந்த காதல் திருமணம்!.. பவதாரிணி வாழ்வில் நடந்த சோகம்..
ஆனால், பிரபுதேவா – ரோஜா நடிப்பில் வெளிவந்த ராசைய்யா படத்தில் இடம்பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் மூலம் மகளை பாடகி ஆக்கினார் ராஜா. அதன்பின் தான் இசையமைத்த பல திரைப்படங்களிலும் மகளை பாட வைத்தார். அதன்பின் அலெக்ஸாண்டர், உல்லாசம், காதலுக்கு மரியாதை, அழகி, ஃபிரண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்தா, அனேகன், மாநாடு ஆகிய படங்களில் பவதாரிணி பாடியிருக்கிறார்.
மேலும், தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். தமிழில் அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, கள்வர்கள், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் பவதாரிணிதான். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி அந்த நோய் காரணமாக தனது குரலையும் இழந்தார். இந்த நிலையில்தான் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துகொள்வதற்காக சமீபத்தில் இலங்கை சென்றார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இலங்கையிலேயே மரணமடைந்தார். இவரின் மரணம் ராஜாவின் ரசிகர்களுக்கும், திரையுலகினருகுக்ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானம் மூலம் அவரின் உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி நடைபெறவுள்ளது. பவதாரிணியின் மரணம் இளையராஜா மற்றும் அவரின் உறவினர்களின் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அவ்ளோ புரமோஷன் பண்ணியும் இவ்ளோதான் வசூலா?.. சிங்கப்பூர் சலூன் நிலைமை இப்படி ஆகிடுச்சே?..