நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பூமிகா. இந்த வயதிலும் கும்முன்னு இருக்காங்க.!!
விஜய் நடிப்பில் கடந்த 2001ல் வெளியான படம் பத்ரி. இது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான தம்முடு படத்தின் ரீமேக் ஆகும். பத்ரி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா.
அதன்பின் தெலுங்கில் பவன் கல்யாணுடன் குஷி படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இவருக்கு தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதையடுத்து தெலுங்குப்படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு பல படங்களில் நடித்த இவர் தமிழில் ரோஜா கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைந்ததையடுத்து 2007ல் பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் வாய்ப்பு குறையவே அக்கா, அண்ணி போன்ற வேடங்களை ஏற்று நடிக்க தொடங்கினார்.
அப்படித்தான் எம்.எஸ்.தோனி படத்தில் தோனியின் அக்காவாக நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றும் அவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் கும்முன்னு இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது இவர் தமிழில் உதயநிதி நடிக்கும் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.