அடிமையா என்ன? மகள் படிப்புக்கு காசு கேட்டும் தரல.. கமலை விட்டு பிரிந்த பிரபலம்

by Rohini |   ( Updated:2025-05-01 03:21:00  )
kamal (1)
X

kamal (1)

Kamal: தமிழ் சினிமாவில் ஒரு சகலகலாவல்லவன் என்றால் அது நடிகர் கமல்தான். அவர் நடித்த படங்களின் பெயரை வைத்தே அவரை நாம் வரையறை செய்யலாம். அந்தளவுக்கு சினிமாவில் அவருக்கான பங்களிப்பு என்பது மிக அதிகம். சினிமாவில் ஏகப்பட்ட துறைகள் இருக்கின்றன. அத்தனை துறைகளிலும் தனக்கான முத்திரையை பதித்து இருக்கிறார் கமல். பன்முகத்திறமைசாலியாக இந்த சினிமாத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில்கூட ஏஐ தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் படித்துவிட்டு அதை தமிழ் சினிமாவில் புகுத்தி தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார் கமல். அவருடைய நடிப்பில் ஜூன் 5 ஆம் தேதி தக் லைஃப் படம் ரிலீஸாக இருக்கின்றது. மணிரத்னம் இயக்க்த்தில் கமல் நடிக்கும் இந்தப் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

கமலை பொறுத்தவரைக்கும் படங்களில் அவருடைய மேக்கப்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கு. இந்தியன் படத்தில் அவருடைய வயதான தோற்றம், அவ்வைசண்முகியில் பெண் வேடம், தசாவதாரம் படத்தில் 10 விதமான மேக்கப் என மேக்கப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் கமல். இந்த நிலையில் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான புஜ்ஜி பாபு ஒரு பேட்டியில் கமலை பற்றி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்தியன் படத்திற்காக புஜ்ஜி பாபுவை அழைத்தாராம் கமல். ஆனால் புஜ்ஜி பாபு உங்க கேரக்டர் வேற.என்னுடைய கேரக்டர் வேற என்று கமலிடமே நேரடியாக சொல்லி மறுத்திருக்கிறார். இருந்தாலும் அவர்தான் வேண்டும் என சில முக்கியமானவர்களின் பரிந்துரையின் பேரில் இந்தியன் படத்திற்காக புஜ்ஜி பாபுவை வைத்துக் கொண்டாராம் கமல் . அப்போதுதான் அவ்வணை சண்முகி படத்தையும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்த நேரத்திலும் புஜ்ஜி பாபுதான் மேக்கப் கலைஞராக பணியாற்ற வேண்டியதாம். ஆனால் அப்போது புஜ்ஜி பாபுவின் மகள் எம்.சி.ஏ படிப்பு செலவுக்காக பணம் கேட்க, புஜ்ஜி பாபு கமலிடம் பண உதவி கேட்டாராம். ஆனால் கமல் கொடுக்கவில்லையாம். ச்ச இவ்வளவு உழைச்சாலும் நமக்கு மரியாதை இல்லையே? நாம என்ன அவங்களுக்கு அடிமையா? என புஜ்ஜி பாபு கமல் மூஞ்சியிலேயே முழிக்க கூடாது என அவ்வை சண்முகி படத்தில் இருந்தும் விலகிவிட்டாராம்.

Next Story