90's கிட்ஸ்க்கு வயசாகிடுச்சோ.! கனவு கன்னிகள் எல்லாம் அம்மாவாக நடிக்க கிளம்பிட்டாங்க.!
90களில் நாம் ரசித்து பார்த்த பல ஹீரோயின்கள் தற்போது வயதாகி அவர்கள் திருமணம் குழந்தைகள் என செட்டிலாகி விட்டனர். அதில் ஒரு சிலர் மட்டும் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அதுவும் சிலர் மட்டுமே. நமக்கு தெரிந்து நடிகை திரிஷா மட்டுமே தற்போது வரை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மற்ற நடிகை எல்லாம் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டனர். சிலர் மட்டும் சினிமாவில் அக்கா, சிறுவயது ஹீரோ ஹீரோயினுக்கு அம்மா என்று நடித்து வருகின்றனர்.
இது எது தமிழில் பத்ரி, ரோஜாகூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து தமிழக இளைஞர்களை கவர்ந்த நடிகை பூமிகா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என நடித்து வந்தார். திருமணம் ஆன பிறகு கடைசியாக தோனி படத்தில் தோனிக்கு அக்காவாக பார்த்திருப்போம்.
இதையும் படியுங்களேன் - மாஸ்டர் வசூலால் கரண்ட் பில் கட்ட கூட முடியவில்லை.! வலிமைதான் டாப்.! இதென்ன புதுசா இருக்கு.!
அவர் தற்போது ஓர் தெலுங்கு படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இதேபோல வரலாறு படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த கனிகா மலையாளத்தில் தொடர்ந்து அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த செய்திகளை பார்க்கும் போது 90 கிட்ஸ் களுக்கு வயதாகி விட்டதோ என்ற எண்ணம் வர தொடங்கிவிட்டது. 90;sகளில் நாம் கனவு கன்னியாக இருந்த பல ஹீரோயின்கள் தற்போது அம்மாவாக மாறி விடுகின்றனர். அல்லது அம்மாவாக நடித்து வருகின்றனர்.