கமல் விலகியதால் பிக்பாஸ்சுக்கு வந்த புது சிக்கல்..! அடுத்த முடிவு இதுதானாம்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன் வரை உலகநாயகன் கமல் திறம்பட நடத்தி முடித்துள்ளார். இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில நேரங்களில் விமர்சனத்துக்கும் ஆளானது. நிகழ்ச்சியில் கமல் வரும்போதும், அவர் கேட்கும் கொக்கிப்பிடி கேள்விகளிலும், குறும்படம் காட்டும்போதும் சுவாரசியம் அதிகரித்தது.
இந்த நிகழ்ச்சியை அவரை விட்டால் வேறு யாரும் அவ்வளவு சுவாரசியமாக நடத்த முடியாது. போட்டியாளர்களிடம் ஒரு வார்த்தை சொன்னாலும் அது அவர்களது தவறுக்கு சூடு போட்டது போல இருக்கும். மற்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி நடந்தாலும் கமல் நடத்தியதைப் போல சுவாரசியமாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அந்த பிக்பாஸில் இருந்து கமல் விலகியதால் அந்த நிகழ்ச்சியை வழங்கும் நிறுவனம் பெரும் சிக்கலில் உள்ளதாம். என்னன்னு பார்ப்போமா...
பிக்பாஸை வனஜே நிறுவனம் தான் வழங்கிக்கிட்டு இருந்தாங்க. நீங்க விலகக்கூடாதுன்னு நிறைய தடவை சொல்லிப் பார்த்தாங்களாம். இப்போது கமல் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகினால் விளம்பர நிறுவனங்கள் பின்வாங்குகிறார்களாம்.
உலகநாயகன் கமல் இல்லைன்னா நாங்க இந்த நிகழ்ச்சியில பங்கெடுக்க முடியாது. அவருக்கு இணையாக நீங்க வேற யாரையாவது தேர்ந்தெடுத்தா ஸ்பான்சர் பண்றதுக்கு யோசிப்போம். ஆனா எங்களோட விருப்பம் சில பேர் இருக்காங்க.
அவங்களைக் கொண்டு வந்தீங்கன்னா ஸ்பான்சர் பண்ணுவோம்னு வினெஜே நிறுவனத்துக்கு நெருக்கடியைக் கொடுத்துருக்காங்களாம். விஜய் சேதுபதி, சிம்பு ஆகிய இருவரையும் தான் ஸ்பான்சர் கம்பெனிகள் குறிப்பிடுகிறார்களாம்.
இவர்களில் யாராவது ஒருவர் பிக்பாஸை நடத்தினால் நாங்கள் ஸ்பான்சர் பண்றோம்னு சொல்ல, இதுல விஜய் சேதுபதியோட பேச்சு வார்த்தை 90 சதவீதம் சக்சஸ்னும் சொல்றாங்க.
இப்படி ஒரு தரப்பு சொல்ல, இன்னொரு தரப்பு சிம்புவுடனும் பேச்சுவார்த்தை நடக்குது. அது இன்னும் முடியலை. அது முடியும்போது நாங்கள் யார்னு சொல்வோம். ஆனால் சிம்பு என்ன மனநிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.
உலகநாயகன் கமலும் சிம்புவைத் தான் சிபாரிசு பண்ணினாராம். அதுக்கு இடையில் ராஜ்கமல் சார்பாக மகேந்திரன் சிவகார்த்திகேயனைப் பரிந்துரை பண்ணி இருக்கிறார். இப்போது விஜய் சேதுபதி தான் அவைலபிலா இருக்கிறாராம்.