Categories: Entertainment News television

மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி …!

பிக்பாஸ் நிகழ்ச்சி நாடு முழுவதும் பலரால் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழில் 5 வது சீசன் நடத்தப்பட்டு வருவது போல ஹிந்தியில் 15-வது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனவரி 16 அன்று நிகழ்ச்சி முடிவதாக இருந்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சி மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்படுவதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கான் அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Published by
Manikandan