காப்பாற்றிய ரஜினி!..கால வாறிவிட்ட அஜித்!..சைலண்டா இருந்து ஒரு பெரிய கம்பெனியையே இழுத்து மூடிட்டீங்களே தல!..

by Rohini |   ( Updated:2022-11-18 07:43:06  )
rajini_main_cine
X

rajini

இன்றைய தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் ரஜினி மற்றும் நடிகர் அஜித். ஒருபக்கம் கமல் , விஜய் இருந்தாலும் ரஜினிக்கும் அஜித்திற்கும் சில விஷயங்களில் ஒற்றுமைகள் இருக்கின்றது. கிட்டத்தட்ட 70,80களில் இருந்தே இன்று வரை இளைய தலைமுறை நடிகர்களோடு டஃப் கொடுத்து வருகிறார் ரஜினி.

rajini1_cine

rajiini

படப்பிடிப்பு

இவர் தற்போது ஜெய்லர் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும் இந்த படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் ரஜினி. அதற்கான வியாபாரமும் நடந்து கொண்டு வருகிறது.

rajini2_cine

ajith

நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். வருகிற பொங்கல் அன்று படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைய இருக்கிறார் அஜித்.

வியாபாரம்

பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே பூஜை போட்டதில் இருந்தே அவர்களுக்கான வியாபாரம் ஆரம்பிக்க தோன்றிவிடும். அதில் ரஜினியின் படம் என்றால் சொல்ல வேண்டுமா என்ன? சுபாஸ்கரன் தயாரிப்பில் தயாராகும் இரண்டு படங்களுக்கும் ரஜினியின் சம்பளம் 250 கோடி என பேசப்பட்டுள்ளது.

rajin3_cine

rajini

ஒவ்வொரு பட தயாரிப்பு கம்பெனியும் நடிகர்களின் மார்க்கெட்டை பொறுத்தே படத்தை தயாரிக்க முன்வருகின்றனர். அது நல்ல கதையா என்றெல்லாம் பார்க்க விரும்புவதில்லை. பெரும்பாலான தயாரிப்பு நிறுவனம் இந்த வழியையே பின்பற்றுகின்றனர். அதில் விதிவிலக்காக இருந்தது ஏஜிஎஸ் நிறுவனம். புதுமுக நடிகர் என்றாலும் பயமில்லாமல் லவ்டுடே படத்தை தயாரித்து வெளியிட்டது.

சிவாஜி புரடக்‌ஷன்

வெரும் 5 கோடியில் தயாரிக்கப்பட்ட அந்த படம் கிட்டத்தட்ட 50 கோடி அளவில் வசூலை அள்ளியிருக்கிறது. இதே மன நிலையிலா இருக்கிறார்கள் சில தயாரிப்பு கம்பெனிகள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரடக்‌ஷன் கம்பெனி. ஆரம்பத்தில் இந்த கம்பெனியை சிவாஜியும் அவரது அண்ணனான வி.சி.சண்முகமும் நிறுவி வந்தனர்.

rajini3_cine

rajini

அவர்களுக்கு பிறகு பிரபுவும் ராம்குமாரும் நிர்வகித்து வந்தனர். இந்த புரடக்‌ஷன் மூலம் சிவாஜி மற்றும் பிரபுவின் ஏராளமான படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிட்டனர். அதில் லாபமும் நட்டமும் பார்த்து வந்த நிறுவனம் ஒரு கட்டத்தில் கடும் பின்னடைவில் இருக்கும் போது ரஜின் தானாக முன்வந்து மன்னன் திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த படம் சூப்பர் ஹிட்.

rajini4_cine

ajith

அதன் பின் சிறிது காலம் கழித்து சந்திரமுகி என்ற பிரம்மாண்ட படத்தை கொடுத்தார். அந்த படம் எவ்ளோ பெரிய வெற்றி என்று சொல்ல வேண்டியதில்லை. கடைசியாக சிவாஜி புரடக்‌ஷன் அஜித்தை வைத்து ‘அசல்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. ஆனால் அந்த படம் படு ஃப்ளாப். அவ்ளோதான் அதன் பிறகு சிவாஜி புரடக்‌ஷன் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. அப்படியே தயாரிப்பதை நிறுத்திவிட்டனராம் பிரபுவும் ராம்குமாரும். சிவாஜி புரடக்‌ஷனில் கடைசியாக வெளிவந்த படமாக அசல் திரைப்படம் தான் விளங்குகிறது.

Next Story