Movie relase in 2024: தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வருகிறது. ஆனால், அனைத்துமே ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறுவதில்லை. அதில் 30 அல்லது 40 சதவீத படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டரில் ஓடி தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறது. அதில், சில படங்களே அதிக லாபத்தை கொடுக்கிறது.
அதேபோல் பெரிய நடிகர்கள் தங்களின் திரைப்படங்கள் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற நாட்களில் வெளியாவதை பெரிதும் விரும்புவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே இது தொடர்கிறது. ரஜினி, கமலின் பல திரைப்படங்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் போட்டி போட்டது.
இதையும் படிங்க: தங்கத்தில் விளையாடிய ஹரோல்ட் தாஸ்.. மகள் நிச்சயத்தார்த்த விழாவில் நடந்த ஆச்சரியங்கள்..!
இப்போது விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களும் இந்த பண்டிகை நாட்களை குறி வைக்கிறார்கள். இந்நிலையில், பெரிய நடிகர்கள் இப்போது நடித்து வரும் மற்றும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்கள் எப்போது வெளியாகிறது என பாரப்போம்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் நாளை அதாவது 10ம் தேதி கார்த்தியின் ஜப்பானும், ராகவா லாரன்ஸ் மற்றும் எ.ஸ்.ஜே சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா படமும் வெளியாகிறது. தீபாவளி பெரிய படங்கள் என்றால் இது இரண்டு மட்டுமே. அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4, சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை குறி வைத்துள்ளது.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கி ரஜினி கவுரவ வேடத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் பொங்கலுக்கு வருவதாக இருந்து பின் இப்போது ஜனவரி 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநாளில், ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தங்கலான் திரைப்படமும் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: லோகேஷுக்கு அடுத்து இவர்தான்!. ரஜினி டிக் அடித்த இயக்குனர்.. தலைவர் 172 பரபர அப்டேட்..
வெங்கட்பிரபு இயக்கதில் விஜய் நடித்து வரும் படமும், அஜித்தின் விடாமுயற்சி படமும் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா, கமலின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 ஆகிய படங்கள் அடுத்த வரும் தமிழ் புத்தாண்டை குறி வைத்துள்ளது. அதேபோல், அடுத்த வரும் தீபாவளிக்கு இந்தியன் 3 வெளியாகவுள்ளது.
மேலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் அடுத்த வருடம் ஆயுத பூஜைய குறி வைத்துள்ளது. அதேபோல், மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படமும், ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படமும் கூட அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. ஆனால், ரிலீஸ் தேதி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இதில், ரஜினி 170, இந்தியன் 2, தளபதி 68, விடாமுயற்சி ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவுடன் சில படங்கள் ரிலீஸிலிருந்து பின் வாங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கமலுக்கு வில்லனா நடிச்சது இவனா?!.. ஏற இறங்க பாத்து பாராட்டிய ரஜினிகாந்த்…