அடுத்த 5 மாசம் சும்மா தெறிக்கவுடப் போகுது!.. பெரிய நடிகர்களின் 8 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்!..

by சிவா |
vijay
X

தமிழ் சினிமாவுக்கு 2024 வருடத்தின் முதல் பாதி சரியாக அமையவில்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களை கவரவில்லை. அதனால், அந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

அதன்பின் வெளிவந்த படங்களும் பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டவில்லை. ஒருவழியாக சுந்தர் சி-யின் அரண்மனை 4 படம் வந்து ஐசியூவில் இருந்த தமிழ் சினிமாவுக்கு குளுக்கோஸ் ஏற்றியது. அந்த படம் 90 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அதோடு, சரி, அதன்பின் வந்த படங்கள் ஓடவில்லை.

இதையும் படிங்க: ராயன் படத்தோட கதை காப்பியா? பிரபலம் சொன்ன சீக்ரெட்… அட அந்த ஹீரோவோட படமா?

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான இந்தியன் 2 படமே எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. படம் வெளியாகி 2 நாட்களிலேயே தியேட்டர்கள் காத்து வாங்க துவங்கிவிட்டது. இப்போது ஒவ்வொரு காட்சியிலும் சுமார் 20 பேர் மட்டுமே படம் பார்க்கிறார்கள். சில தியேட்டர்களில் அதற்கும் குறைவாகவே கூட்டம் இருக்கிறது.

ஒருபக்கம் விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களும் கடந்த 6 மாதங்களில் வெளியாகவில்லை. ஆனால், அடுத்து 5 மாதங்கள் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கிறது. இந்த படங்களின் வசூல்தான் தமிழ் சினிமாவை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு நன்றி.. ‘கோட்’ படம் பற்றி இவ்ளோ சொல்லுவாருனு நினைக்கல! மனம் திறந்த பிரசாந்த்

குறிப்பாக அஜித்தின் விடாமுயற்சி, விஜயின் கோட், ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. விடாமுயற்சி தீபாவளிக்கு வரவில்லை என்றாலும் இந்த வருடத்தில் கண்டிப்பாக இப்படம் ரிலீஸ் ஆகிவிடும். செப்டம்பர் 5ம் தேதி விஜயின் கோட் வெளியாகவுள்ளது.

அதேபோல், தனுஷின் ராயன் வருகிற 26ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், விக்ரமின் தங்கலான், சூர்யாவின் கங்குவா இரண்டுமே ஆகஸ்டு 15 வெளியாகவுள்ளது. தீபாவளி விருந்தாக சிவகார்த்திகேயனின் அமரன் வெளியாகவுள்ளது. இதுபோக, பிரசாந்தின் அந்தகன் படமும் ஆகஸ்டு மாதம் வெளியாகவுள்ளது.

Next Story