Categories: Entertainment News latest news

தாமரைக்கு ஆசை முத்தம் கொடுத்து மல்லிகைப்பூ சூடிய கணவர் – அக்காவுக்கு எம்புட்டு சதோஷம்!

பிக்பாஸ் வீட்டில் தாமரையின் கணவர்!

இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு பெரு மகிழ்ச்சி தருவதோடு ஆடியன்ஸிற்கு சுவாரஸ்யத்தை அளிக்கின்றனர். அந்தவகையில் பிரியங்கா, பாவினி , அக்ஷரா, சிபி, ராஜு, உள்ளிட்டோரின் குடும்பம் வருகை தந்து அவர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று தாமரையின் மகன் மற்றும் கணவர் வந்து அவரை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். நாடக கலைஞரான தாமரை கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இளைய மகன் தன்னுடனும் மூத்த மகன் கணவருடனும் இருப்பதாக ஏற்கனவே நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்: சிம்புவே சொல்லிட்டாரு… இனிமே அவர் வேற மாதிரிதான் பார்க்க போறோம்….

ஆனால், இன்று பிக்பாஸ் அந்த பிரச்சனையெல்லாம் மறக்கடித்து பிரிந்து கிடந்த குடும்பத்தை ஒன்று சேர்ந்துள்ளனர். மேலும், தாமரை அதிகம் கோபப்படுவதாக கூறி அதை கன்ட்ரோல் செய்ய சொன்னார் கணவர். இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளர்கள் குடும்பத்தினரின் வருகை இந்த பிக்பாஸ் வீட்டை மேலும் அழகு படுத்தியது.

Published by
பிரஜன்